இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங்கை உடற்பயிற்சி ஆர்வலர் என்று குறிப்பிடலாம். தனது உடற்பயிற்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவர். அவரது வளைவு நெளிவான தோற்றத்தின் ரகசியம் இங்கே...
கடுமையான பயிற்சி
ரித்திகா சிங் தினமும் ஜிம்மில் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்கிறார். எந்த தடையாக இருந்தாலும் அவர் ஜிம்மிற்கு செல்வதை நிறுத்துவதில்லை.
கிக் பாக்ஸிங்
நடிகை ரித்திகா சிங் ஒரு குத்துச்சண்டை வீரர் என்பது அனைவரும் அறிந்ததே. கிக் பாக்ஸிங் என்பது அவரது உடற்பயிற்சிக்கான ரகசியங்களில் ஒன்றாகும். இது உடலில் கூடுதல் கொழுப்பை அகற்ற உதவுகிறது. எடையை நிர்வகிப்பதற்கும் கிக் பாக்ஸிங் உதவுகிறது.
கெட்டில்பெல் ஸ்விங்
தனது தசை வலிமையை அதிகரிக்கவும், கலோரிகளை எரிக்கவும் ரித்திகா சிங் கெட்டில்பெல் ஸ்விங்கை உடற்பயிற்சி வழக்கத்தில் சேர்த்துள்ளார். இது அவரது இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
உணவுத் திட்டம்
ரித்திகா சிங் தனது எடையை பராமரிக்க கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள உணவுமுறையை கடைபிடிக்கிறார்.
பழங்கள், காய்கறிகள்
ரித்திகா சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான குடலை பராமரிக்கவும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுகிறார்.
இந்த கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் பெண் தோழிகளுக்குப் பகிரவும்.