Valentine's Day 2024: டேட்டிங் செல்லும் போது ஏற்படும் பயத்தை போக்க 6 டிப்ஸ்
Alagar Raj AP
05-02-2024, 11:49 IST
www.herzindagi.com
டேட்டிங்
ஒருவருடன் டேட்டிங் செய்யும் போது பதற்றம், பயம் போன்ற கவலைகளை சிலர் சமாளித்து விடுவார்கள். ஆனால் அதிகப்படியான பேர் இதில் தோல்வி அடைகின்றனர். அவர்களுக்கு டேட்டிங் பயத்தை எப்படி சமாளிப்பது என்று இந்த பதிவில் காண்போம்.
உங்கள் பயத்தை புரிந்து கொள்ளுங்கள்
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு என்பதை உணருங்கள், குறிப்பாக டேட்டிங் சூழலில் உங்கள் பயத்தின் தூண்டுதல்களை புரிந்து கொண்டு அதை நிராகரிக்க வேண்டும்.
டேட்டிங்க்கு தயாராகுங்கள்
டேட்டிங்கில் நீங்கள் பேசும் உரையாடல் மற்றும் செயல்பாடுகளின் தலைப்புகளைப் பற்றி முன்கூட்டியே சிந்தித்து அதற்கு தயாராகி கொள்வதால் நீங்கள் நிம்மதியாக உணர முடியும்.
டேட்டிங் செல்லும் இடம்
உங்களுக்கு நன்கு பழக்கப்பட்ட இடத்தில் டேட்டிங்கை வைத்துக்கொள்ளுங்கள். பழக்கப்பட்ட இடம் என்பதால் அது உங்களுக்கு வசதியாகவும், சாதகமான சூழலையும் அமைக்கும்.
யதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைக்கவும்
இது வெறும் டேட்டிங் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்குள் உங்கள் முழு எதிர்காலத்தையும் அந்த நபருடன் நினைக்க கூடாது. டேட்டிங் என்பது ஒருவரை ஒருவர் நன்றாக அறிந்து கொள்வது மட்டுமே.
சுவாச பயிற்சி
டேட்டிங் செல்வதற்கு முன் ஆழ்ந்த சுவாசம் அல்லது தியானம் போன்ற நினைவாற்றல் மற்றும் தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் பயம் மற்றும் பதற்றத்தை போக்கும்.
அனுபவம்
உங்கள் டேட்டிங் தோல்வியில் முடிந்தாலும் அதை பற்றி கவலை கொள்ளாமல் கடந்த டேட்டிங்கில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த டேட்டிங்கில் கூடுதல் புரிதலுடன் அணுகலாம்.