ஆன்லைனில் புடவை ஷாப்பிங் செய்பவர்களுக்கான பாதுகாப்பு குறிப்புகள்
S MuthuKrishnan
07-04-2025, 14:23 IST
www.herzindagi.com
ஆன்லைனில் புடவை வாங்கும் போது நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள் மற்றும் பிற குறிப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
வலைதள பக்கம்
நீங்கள் ஷாப்பிங் செய்யப் போகும் வலைதள பக்கம் பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வலைதளத்தின் URL
Google Maps
நீங்கள் ஷாப்பிங் செய்யும் வலைதள பக்கத்திற்கு அவர்களின் கடை எங்கு உள்ளது என்பதை Google Maps ஐப் பயன்படுத்தி பார்க்கவும்.
ரிவியூ
நீங்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் வெப்சைட்டுக்கு மற்ற வாடிக்கையாளரிடமிருந்து புகைப்படங்கள், ரிவ்யூ மற்றும் அதைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
ரிட்டன் பாலிசி
நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வெப்சைட்டுக்கு தெளிவான மற்றும் கஸ்டமர் சர்வீஸ், ரிட்டன் பாலிசி உள்ளிட்ட கொள்கைகளை கொண்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
புடவை விபரம்
நீங்கள் தேர்ந்தெடுத்த புடவையைப் பற்றி அறிய புடவையின் தோற்றம், புடவையில் துணிவகை உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யுங்கள்.
உதாரணத்திற்கு நீங்கள் தேர்வு செய்த புடவை தூயப்பட்டு பருத்தி பனாரஸ் பட்டு என அதன் வகை குறிப்பிடப்பட்டுள்ளனவா மற்றும் நெசவு நுட்பங்கள் பற்றி விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என உறுதி செய்து கொள்ளுங்கள்.
சான்றிதழ்
பாரம்பரிய புடவைகளுக்கு பட்டு மார்க் அல்லது கைத்தறி சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் வழங்குகிறார்களா என சரி பார்க்கவும்.
எந்த சந்தர்ப்பங்களில் வாங்குவீர்கள்?
நீங்கள் புடவை வாங்குவதற்கான காரணத்தை கவனியுங்கள். பண்டிகைகள் திருமணங்கள் வரவேற்புகள் போன்றவற்றிற்கு சிப்பான் அல்லது ஜார்ஜெட் போன்ற இலகுரக துணிகள் பகல் நேர நிகழ்வுகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
கட்டண முறை
வலைதளத்தில் கிரெடிட் கார்டுகள் அல்லது டெபிட் கார்டுகள் அல்லது UPI போன்ற பாதுகாப்பான கட்டண முறைகளை பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
டெலிவரி
ஆன்லைனில் கட்டணம் செலுத்த விரும்பவில்லை எனில் COD ஒரு பாதுகாப்பான வழி. இந்த முறைக்கு நீங்கள் ஷாப்பிங் செய்யும் வலைதள பக்கத்தில் அனுமதி உண்டா என சோதித்துக் கொள்ளுங்கள்.