குடியரசு தினத்தன்று இப்படியும் ஆடைகளை தேர்வு செய்யலாம்


sreeja kumar
2023-01-25,16:03 IST
www.herzindagi.com

குடியரசு தினம்

  நாடு முழுவதும் நாளைய தினம் நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் பெண்கள் தனித்துவமான ஆடைகளை தேர்வு செய்து தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தலாம். அதற்கு எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்யலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

மூவர்ண சேலை

  தேசிய கொடியின் நிறத்தை பிரதிபலிக்கும் மூவர்ண சேலை பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆன்லைனிலும் இதை ஈஸியாக வாங்கலாம். குறிப்பாக குடியரசு தினத்தன்று ஆபீஸ் மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள் டிசைனர் லுக்கில் இருக்கும் மூவர்ண சேலையை தேர்வு செய்யலாம்.

குழந்தைகளுக்கான ஆடைகள்

  பள்ளிகளில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் மாணவிகள் தேசிய கொடியின் நிறத்திலே ஆரஞ்சு கலர் பலாசா ஃபேண்டு, பச்சை கலர் மினி டாப்பை தேர்வு செய்து அணியலாம்.

கலர்ஃபுல் துப்பட்டா

  தற்சமயம் குடியரசு தின ட்ரெண்டிங்காக மூவர்ண நிறத்தில் சாயம் பூசப்பட்ட துப்பட்டாக்கள் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளன. டீன் ஏஜ் பெண்கள் இந்த வகையான துப்பட்டாவை தேர்வு செய்யலாம். சிம்பிளாகவும் இருக்கும், எல்லா ஆடையுடனும் பொருந்தி விடும்.

வெள்ளை நிற ஆடை

  அமைதியை குறிக்கும் வெள்ளை நிற ஆடைகளை குடியரசு தினத்தன்று அனைவரும் அணியலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு வெள்ளை நிற ஆடையை அணிவித்து கையில் தேசிய கொடி கொடுத்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிவார்கள்.

வெள்ளை சுடிதார்

  பல ஆண்டுகளாக குடியரசு தினத்தன்று பெண்கள் வெள்ளை நிறத்தில் காட்டன் சுடிதார்கள் அணிவதை வழக்கமாக வைத்துள்ளனர். இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், ஆபீஸ் செல்பவர்கள், ஆசிரியர்கள் பலரும் குடியரசு நாளில் வெள்ளை நிற சுடிதார்களை அதிகம் தேர்ந்தெடுத்து அணிவதை பார்க்கலாம்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.