கடந்த 6 வருடங்களாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற வீரர்கள்
Alagar Raj AP
09-01-2024, 14:25 IST
www.herzindagi.com
கடந்த 6 வருடங்களாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் யார் முதல் பரிசு வென்றுள்ளார்கள் என்பதை வரலாற்று பக்கங்களை புரட்டி பாப்போம்.
2023
சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்த அபி சித்தர் என்பவர் 25 காளைகளை பிடித்து முதல் பரிசை வென்றார். அவருக்கு ரூ. 7 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் பாசுமாடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.
2022
மதுரை மாவட்டம் கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 21 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
2021
2021 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்த கண்ணன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
2020
ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்பவருக்கு முதல் பரிசாக கார் மற்றும் 4 பசு மாடுகள் பரிசாக வழங்கப்பட்டது.
2019
15 காளைகளை அடக்கிய ராம்குமார் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. இவரது சகோதரர் ரஞ்சித்குமார் தான் 2020ம் ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசை பெற்றார்.
2018
அலங்காநல்லூரை சேர்ந்த அஜய்குமார் 8 காளைகள் பிடித்து முதலிடம் பிடித்தார். இவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.