லேடீஸ் ஹேண்ட் பேக்கில் இடம்பெற வேண்டிய பொருட்கள்


Raja Balaji
18-03-2024, 08:45 IST
www.herzindagi.com

    அன்றாட பணிக்காக வெளியே செல்லும் பெண்கள் ஹேண்ட் பேக்கில் எடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசியமான பொருட்களை ஒருமுறை சரிபார்ப்பது அவசியம். ஹேண்ட் பேக்கில் இடம்பெற வேண்டிய பொருட்களின் பட்டியல் இங்கே...

பாக்கெட் கண்ணாடி

    ஒரு முக்கியமான நிகழ்வுக்கு வெளியே செல்லும் போது உங்கள் ஹேண்ட் பேக்கில் மேக்கப் பொருட்களுடன் பாக்கெட் கண்ணாடியை எடுத்துச் செல்வது பயனுள்ளதாக இருக்கும்.

பெப்பர் ஸ்பிரே

    பாதுகாப்பு ஒவ்வொரு பெண்ணின் முன்னுரிமை விஷயமாக இருக்க வேண்டும். பெப்பர் ஸ்பிரே துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

பவர் பேங்க்

    செல்போன் இன்றைய உலகில் அவசியமானது. அதை சார்ஜ் செய்வதற்கு எல்லா இடங்களிலும் வசதி இருக்கும் என சொல்ல முடியாது. எனவே பவர் பேங்க் ஹேண்ட் பேக்கில் இருப்பது அவசியம்.

தண்ணீர் பாட்டில்

    நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்கவுன் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்து நீரிழப்பிலிருந்து உங்களைப் பாதுகாக்க எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் எடுத்து செல்வது நல்லது.

சென்ட் பாட்டில்

    நாள் முழுவதும் வேலை செய்வது உங்கள் உடலை வியர்வை ஆக்குகிறது. எனவே புதிதாக உணர ஹேண்ட் பேக்கில் ஒரு சின்ன திரவிய பாட்டிலை வைத்திருக்க வேண்டும்.

சுகாதார நாப்கின்

    வரும் முன் காப்பதே சிறந்தது. உங்களுக்கோ அல்லது உங்கள் தோழிக்கோ இது எப்போது தேவைப்படலாம் என தெரியாது. எனவே எப்போதும் உங்கள் பையில் சானிட்டரி நாப்கின் வைத்துக் கொள்ளுங்கள்.

லிப் பாம்

    உலர்ந்த உதடுகளை எந்த பெண்ணும் விரும்புவதற்கு வாய்ப்பில்லை. நாள் முழுக்க உதடுகளை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்துங்கள்.

    இந்த கதை பிடித்திருந்தால் உங்களுடைய தோழிகளுக்கும் பகிரவும்.