Budget Friendly Spots: காசு காலியாகாமல் காணும் பொங்கலை கொண்டாட சூப்பரான இடங்கள்
Alagar Raj AP
10-01-2024, 11:04 IST
www.herzindagi.com
காணும் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
கீழடி அருங்காட்சியகம்
சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில் அமைந்துள்ளது கீழடி அருங்காட்சியகம். பண்டைய தமிழ் மக்களின் நாகரிகம், அவர்கள் பயன்படுத்திய பண்டைய பொருட்கள் குறித்து தெரிந்து கொள்ள கீழடி அருங்காட்சியகம் சிறந்த இடமாக இருக்கும்.
குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா
சேலத்தில் அமைந்துள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா. இது தமிழகத்தின் இரண்டாவது பெரிய விலங்கியல் பூங்காவாகும். இங்கு யானை, மான், முதலை, வெள்ளை மயில், நரி வாத்து உள்ளிட்ட உயிரனங்கள் உள்ளது.
மணப்பாடு கடற்கரை
மணப்பாடு கடற்கரை இது தூத்துக்குடியில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மணல்குன்றின் மீது உள்ள திருச்சிலுவை நாதர் ஆலயம், கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்த குகை உள்ளிட்டவற்றை காணலாம். நீர்ப்பறவை, இயற்கை உள்ளிட்ட படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டது.
தஞ்சாவூர் அரச அரண்மனை அருங்காட்சியகம்
தஞ்சாவூர் நாயக்கர் அரசர்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனை அதன் பின் மராட்டிய அரசர்க்ளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இங்கு மன்னார் ஆட்சிக்கால சுவர் ஓவியங்கள், சிலைகள், பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மோர்தானா அணை
இயற்கை எழில் கொஞ்சும் இரண்டு மலைகளுக்கு நடுவே கட்டப்பட்டுள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே அமைந்துள்ளது. இதற்கு அருகே கவுண்டினியா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளது.
திண்டுக்கல் மலைக்கோட்டை
திண்டுக்கல் நகரின் மையத்தில் அமைந்துள்ளது திண்டுக்கல் மலைக்கோட்டை. நாயகர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோடையில் பீரங்கி மேடு, காவலர் நிற்கும் இடம், படைவீரர்களின் அறை ஆகியவற்றை காண முடியும்.