பித்தளை விளக்கு கறையை தக்காளியை வைத்து மூன்று வழியில் சுத்தம் செய்யலாம்


Alagar Raj AP
27-08-2024, 16:00 IST
www.herzindagi.com

    பித்தளை விளக்குகளில் உள்ள விடாப்பிடியான கறையை சுத்தம் செய்ய கடைகளில் கிடைக்கும் பவுடர்களை வாங்க தேவையில்லை. வீட்டில் உள்ள தக்காளியை பயன்படுத்தி பித்தளை விளக்குகளை சுத்தம் செய்யலாம். அது எப்படி என்று பார்ப்போம்.

தக்காளி

    பித்தளை விளக்குகளை தண்ணீரில் நனைத்து அதன் மேல் தக்காளியை தேய்க்கவும். அதன் பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் விளக்குகளில் உள்ள கறை நீங்கும்.

தக்காளி சாறு

    பித்தளை விளக்குகளை தக்காளி சாற்றில் 30 நிமிடம் ஊற வைத்து கழுவினால் கறைகள் நீங்கும்.

தக்காளி கெட்ச்அப்

    முதலில் பித்தளை விளக்குகளை தண்ணீரில் நனைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் தக்காளி கெட்ச்அப்பை பித்தளை விளக்குகள் மீது மென்மையான துணியால் தேய்க்கவும்.

    அதன் பின் ஒரு மணி நேரம் அப்படியே உலர விட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் பித்தளை விளக்குகளில் உள்ள கறை நீங்கி புதுசு போல் பளபளப்பாக மாறும்.

ஏதேனும் ஒன்று

    தக்காளியில் உள்ள அமிலம் பித்தளை விளக்குகளில் உள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் கறையை நீக்க உதவுகிறது. இதனால் தக்காளி, தக்காளி சாறு அல்லது தக்காளி கெட்ச்அப் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி பித்தளை விளக்குகளை சுத்தம் செய்யலாம்.

ஆளி விதை எண்ணெய்

    பித்தளை விளக்குகளை சுத்தம் செய்த பின் ஆளி விதை எண்ணெயை விளக்கின் மேல் தேய்க்கவும். இதனால் மீண்டும் கறை படிப்பதற்கான வாய்ப்பு குறையும்.