வீட்டு உபயோகம் முதல் மருத்துவம் வரை தேங்காய் நாரின் மகத்தான பயன்கள்
Alagar Raj AP
08-11-2024, 18:14 IST
www.herzindagi.com
தேங்காய், தேங்காய் தண்ணீர், தேங்காய் எண்ணெய், செரட்டை, தேங்காய் நார் என தேங்காயின் பல மூல பொருட்கள் நம் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு விதத்தில் பயன்படுகிறது. அப்படி நம் வாழ்க்கையில் தேங்காய் நாரின் நன்மைகள் இதோ.
வயிற்றுப்போக்கு
தேங்காய் நாரை சுத்தம் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு வீட்டு வைத்தியமாக இருக்கும்.
பற்கள் பளிச்சிடும்
தேங்காய் நாரை கடாயில் வதக்கி க்ஸி போட்டு பொடியாக அரைத்து, அதை வைத்து பல் துலக்கலாம். இப்படி செய்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.
உரம்
தேங்காய் நாரை சிறியதாக பிரித்து ஒரு வாரம் வெயிலில் நன்கு காய வைக்கவும். அதன் பின் அரைத்து வீட்டில் உள்ள தாவரங்களுக்கு உரமாக பயன்படுத்தலாம். தேங்காய் நார் மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
ஸ்க்ரப்பர்
தேங்காய் நாரை பாத்திரம் அல்லது பித்தளை பொருட்களை சுத்தம் செய்ய ஸ்க்ரப்பராக பயன்படுத்தலாம். தேங்காய் நார் பாத்திரங்களில் படிந்துள்ள பிடிவாதமான கறைகளை அகற்ற உதவுகிறது.
கொசு விரட்டி
ஒரு பித்தளை பாத்திரத்தில் தேங்காய் நார் மற்றும் கற்பூரத்தை வைத்து எரிக்கவும். அதில் இருந்து வரும் புகை வீட்டில் உள்ள கொசுக்களை விரட்டியடிக்கும்.
காயத்துக்கு உதவும்
தேங்காய் நாரை மஞ்சளுடன் சேர்த்து நன்றாக அரைத்து காயம் பட்ட இடத்தில் தேய்த்தால் காயத்தின் தீவிரம் குறையும்.
ஹேர் டை
தேங்காய் நாரை கடாயில் கருமையாகும் வரை வதக்கி அதை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும். அதன் பின் தேங்காய் எண்ணெயுடன் கலந்து வெள்ளை முடிக்கு டையாக பயன்படுத்தலாம்.