அரிசி கழுவிய தண்ணீர் அல்லது அரிசியை ஊற வைத்த தண்ணீரை தேவையில்லாமல் கீழே ஊற்றாமல் அதை வீட்டு உபயோகத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
பாத்திரம் கழுவலாம்
அரிசி தண்ணீரை பாத்திரம் கழுவ பயன்படுத்தலாம். அரிசி தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து பாத்திரம் கழுவலாம். அரிசி தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலத்தன்மை பிடிவாதமான கறைகளை அகற்றும்.
தாவர உரம்
அரிசி கழுவிய தண்ணீர் அல்லது அரிசியை ஊற வைத்த தண்ணீரை தேவையில்லாமல் கீழே ஊற்றாமல் அதை வீட்டு உபயோகத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
வெள்ளியை சுத்தப்படுத்தலாம்
வெள்ளி பொருட்களில் படிந்துள்ள கறைகளை அரிசி தண்ணீரால் சுத்தம் செய்யலாம். வெள்ளி பொருட்களை அரிசி தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைத்து, அதன் பின் கழுவுங்கள்.
துணிகளுக்கு…
அரிசி தண்ணீர் பருத்தித் துணிகளுக்கு மிருதுவான அமைப்பை தரும். அதற்கு துவைத்த பருத்தி துணிகளை அரிசி தண்ணீரில் முக்கி எடுத்து, சாதாரண நீரில் கழுவி வெயிலில் காய போடுங்கள்.
செல்லப்பிராணி ஷாம்பு
வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குளிப்பாட்ட அரிசி தண்ணீரை ஷாம்பு போல் பயன்படுத்தலாம். அரிசி தண்ணீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் செல்ல பிராணியின் சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கும்.
பாத்ரூம் டைல்ஸ்
பாத்ரூம் டைல்ஸின் மேற்பரப்பில் உள்ள அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற அரிசி தண்ணீர் பயன்படும். அரிசி தண்ணீரை டைல்ஸின் மேல் தெளித்து, பிரஷ் மூலம் தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.