உடலுக்கு மெக்னீசியம் வேண்டுமா..? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க!
Alagar Raj AP
31-05-2024, 11:00 IST
www.herzindagi.com
மெக்னீசியத்தின் அவசியம்
மெக்னீசியம் உடலுக்கு தேவையான ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இதயம், சிறுநீரகங்கள் மற்றும் தசைகள் சரியாக இயங்க மெக்னீசியம் அவசியம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற மற்ற தாதுக்களின் அளவை உடலில் சரியாக பராமரிக்கவும் மெக்னீசியம் அவசியம்.
வாழைப்பழம்
ஒரு வாழைப்பழத்தில் 37 மில்லிகிராம் மெக்னீசியம் இருக்கும். இதை உங்கள் காலை உணவிலும், உடற்பயிற்சிக்குப் பின் உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாம்
உங்களுக்கு மெக்னீசியம் நிறைந்த சிற்றுண்டி வேண்டுமென்றால் அதற்கு பாதாம் சரியான தேர்வாக இருக்கும். சரியாக 28 கிராம் பாதாமில் 80 மில்லிகிராம் மெக்னீசியம் கிடைக்கும்.
கீரை
மெக்னீசியம் அதிகம் நிரம்பிய உணவு என்றால் அது கீரை தான். சமைத்த ஒரு கப் கீரையில் தோராயமாக 157 மில்லிகிராம் மெக்னீசியம் உங்களுக்கு கிடைக்கும்.
கருப்பு பீன்ஸ்
கருப்பு பீன்ஸ் மெக்னீசியம் நிறைந்த சிறந்த உணவுகளில் ஒன்றாகும். சமைத்த ஒரு கப் கருப்பு பீன்ஸில் 120 மில்லிகிராம் மெக்னீசிய இருக்கும்.
குயினோ
உங்கள் உடலில் மெக்னீசியத்தை அதிகரிக்க குயினோவா உதவும். ஒரு கைப்பிடி குயினோவாவில் தோராயமாக 118 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது.
டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்டில் மெக்னீசியம் இருக்கிறது என்று சொன்னதும் ஆச்சிரியமாக இருக்கா. ஆம் 85% கோகோவில் தோராயமாக 64 மில்லிகிராம் மெக்னீசியம் இருக்கும்.