கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
Shobana Vigneshwar
2023-03-17,18:12 IST
www.herzindagi.com
கோவக்காய்
இது இதயம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கும் மிகவும் நல்லது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது முதல் உடல் எடையை குறைப்பது வரை கோவக்காய் தரும் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறிந்து பயன்பெறுவோம்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கோவக்காய். இதனை வாரத்தில் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை விரைவில் கட்டுப்படுத்தலாம்.
இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும்
கோவக்காய் உடலின் ஆற்றல் அளவை அதிகமாக வைத்திருக்கும். இதனுடன் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துகிறது. இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து சில மரபணு நோய்களையும் சரி செய்ய உதவுகிறது.
உடல் பருமன்
கோவக்காயில் உடல் பருமனை தடுக்கும் பண்புகள் உள்ளன. இது உடல் பருமனால் ஏற்படும் வளர்சிதை மாற்ற நோய்களை தடுக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நரம்பு மண்டல ஆரோக்கியம்
கோவக்காயில் B2 போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் உள்ளன. இவை நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி நினைவாற்றல் இழப்பு நோய், கால்-கை வலிப்பு, உணர்வின்மை, பதட்டம் போன்ற நரம்பு சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது.
சிறுநீரக கல்
சிறுநீர் பாதையில் கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் படிவதால் சிறுநீரக கல் ஏற்படுகிறது. கோவக்காயில் ஆரோக்கியமான கால்சியம் உள்ளது, இது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
செரிமானம்
கோவக்காயில் செரிமானத்திற்கு உதவுக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கல் போன்ற இரைப்பை குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்லது.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.