டயட் இல்லாமல் உடல் எடையை குறைப்பது எப்படி?


Shobana Vigneshwar
2023-01-27,15:21 IST
www.herzindagi.com

எடை இழப்பு

  எடை இழப்பு என்றாலே, உணவுக் கட்டுப்பாடு தான் கண்டிப்பாக நினைவுக்கு வரும். உணவு கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடையைக் குறைப்பதற்கான சில எளிய வழிகளை தெரிந்துகொள்வோம்.

தண்ணீர் குடியுங்கள்

  போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் உடல் நீரேற்றமாகவும், செரிமான சக்தி சீராகவும் இருக்கும். முக்கியமாக அடிக்கடி எதையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வும் ஏற்படாது. இதன் விளைவாக உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உணவை மெல்லுங்கள்

  எப்போது உணவு சாப்பிட்டாலும் அதை பொறுமையாக மென்று சாப்பிடுங்கள். இப்படி செய்வதால் நீங்கள் குறைந்த அளவிலேயே சாப்பிடுவீர்கள். மேலும் முறையாக மென்று சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாகும் என்பதால் அசிடிட்டி பிரச்சனையும் ஏற்படாது.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

  பீன்ஸ், பருப்பு, பட்டாணி, சாலட், பச்சை காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள்-பருப்புகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் எடையை குறைக்கலாம்.

காலை உணவு

  என்ன நடந்தாலும் சரி, காலை உணவை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

போதுமான தூக்கம்

  ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான தூக்கம் மிகவும் அவசியம். இது உடலை ரிலாக்ஸ் செய்து கொழுப்பை எளிதில் கரைக்க உதவுகிறது.

மன அழுத்தம்

  அதிகப்படியான மன அழுத்தமும் உடல் பருமனை ஏற்படுத்துகிறது. அதனால் டென்ஷன் ஆகாதீர்கள். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகா செய்யலாம்.

சர்க்கரை

  சர்க்கரை உங்கள் உடல் எடையை விரைவாக அதிகரிக்கலாம். ஆகையால் உணவில் குறைவான அளவு சர்க்கரையை பயன்படுத்துங்கள். குறிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.