சுவை மிகுந்த மங்குஸ்தான் பழம் உடலுக்கு இவ்வளவு நல்லதா


Shobana Vigneshwar
2023-03-17,18:58 IST
www.herzindagi.com

மங்குஸ்தான்

  பல நூற்றாண்டுகளாக இந்த ஊதா நிற பழம் ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரமாக இருந்து வருகிறது. சுவைமிகுந்த மங்குஸ்தான் பழத்தின் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்.

மூளை ஆரோக்கியம்

  மங்குஸ்தானை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மேலும் மூளையில் ஏற்படும் அழற்சி மற்றும் மனச்சோர்வுடன் தொடர்புடைய அறிகுறிகளை குறைக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு மண்டலம்

  மங்குஸ்தானில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கின்றன. மேலும் இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

இதய ஆரோக்கியம்

  மங்குஸ்தான் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் உடலுக்கு தேவையான HDL அல்லது நல்ல கொழுப்பையும் வழங்குகிறது. இது இதய நோயின் அபாயத்தை குறைக்கும்.

எடை இழப்பு

  மங்குஸ்தான் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. இதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சியினை கடைபிடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.

ஆரோக்கியமான சருமம்

  மங்குஸ்தானில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ​​சூரிய ஒளியினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்ககின்றன. இது வயதான அறிகுறிகளைக் குறைப்பதற்கும் உதவும்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

  மங்குஸ்தானில் உள்ள கலவைகள் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இன்சுலின் எதிர்ப்பை குறைக்க மங்குஸ்தான் சாறை குடிக்கலாம்..

புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்

  இதில் உள்ள பண்புகள் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன. புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க மங்குஸ்தான் பழங்களை உங்கள் அன்றாட உணவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

படித்ததற்கு நன்றி

  இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.