ஒளிரும் சரும அழகிற்கான டயட் சீக்ரெட்
Shobana Vigneshwar
2023-03-18,13:01 IST
www.herzindagi.com
ஒளிரும் சருமம்
மேக்கப் போடாமலேயே இயற்கையான சரும பொலிவை பெற வேண்டுமா? இப்பதிவில் பகிரப்படுள்ள உணவு திட்டம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
#1
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது அவசியம். அதற்கு பிறகு கற்றாழை சாறு அல்லது எலுமிச்சை சாறு குடிக்கலாம். பின் இரவு ஊறவைத்த 4 பாதமை சாப்பிடலாம்.
#2
காலை உணவுடன் நல்ல அளவு பழங்கள், காய்கறிகள் மற்றும் புரதங்களை சேர்த்துக்கொள்ளவும். ஆப்பிள், மாதுளை, பாப்பாளி மற்றும் பிற பருவ கால பழங்களையும் சாப்பிடலாம்.
#3
இடைப்பட்ட உணவாக ஃபிரஷ்ஷாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள், தயிர், மோர் அல்லது இளநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை முற்றிலும் தவிர்க்கவும்.
#4
மதிய வேளையில் கீரைகள், டோஃபு, காளான், மீன், காய்கறிகள், சிக்கன் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதனுடம் ஒரு கிளாஸ் மோர் குடிப்பது கூடுதல் நன்மை தரும்.
#5
மாலை வேளையில் கிரீன் டீ அல்லது ஃபிரஷ் ஆக தயாரிக்கப்பட்ட காய்கறி சாறை வடிகட்டாமல் குடிக்க வேண்டும். இதனுடன் 2-3 அக்ரூட் பருப்புகளையும் சாப்பிடலாம்.
#6
இரவு உணவை 7-8 மணிக்குள் சாப்பிட முயற்சிக்கலாம். பின் இரவு தூங்க செல்வதற்கு முன் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து குடிக்கலாம். இது உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.