உலர் திராட்சையை ஊறவைத்து சாப்பிடுங்க! நன்மைகள் ஏராளம்


Raja Balaji
25-03-2024, 15:31 IST
www.herzindagi.com

    உலர் திராட்சையை ஊறவைத்து காலையில் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தரும். இதில் புரதமும், நார்ச்சத்தும் 10 விழுக்காடு அளவிற்கு இருக்கின்றன.

செரிமான மேம்பாடு

    உலர் திராட்சை குடல் செயல்பாட்டிற்கு உதவி மலச்சிக்கலை தடுக்கிறது. செரிமான அமைப்பிற்கு உலர் திராட்சை மிகவும் நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

    வைட்டமின் சி மற்றும் தாதுக்களால் நிரம்பிய உலர் திராட்சை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

எனர்ஜி பூஸ்டர்

    காலையில் ஊறவைத்த உலர் திராட்சைகளை சாப்பிடுவது எனர்ஜி பூஸ்டர் போல் இருக்கும்.

இதய ஆரோக்கியம்

    ஊறவைத்த உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

எலும்பு மற்றும் சரும ஆரோக்கியம்

    காலையில் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும் அதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும்.

எடை மேலாண்மை

    உலர் திராட்சையில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது நமக்கு திருப்திகரமான உணர்வை தந்து எடை மேலாண்மைக்கு உதவுகிறது.