அதிக ஸ்கிரீன் டைம் மற்றும் மாசுபட்ட சுற்றுசூழல் கரமனாக பலர் கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர்.
உணவுகள்
கண்கள் உடலின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று என்பதால் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க ஸ்கிரீன் டைமை குறைப்பதுடன் சில ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி பார்வை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்து பார்வை குறைபாட்டை தடுக்கும்.
அவகேடோ
வயதானவர்கள் உங்கள் உணவில் அவகேடோவை சேர்க்கலாம். இதில் உள்ள வைட்டமின் ஈ, லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் கலவைகள் வயது தொடர்பான கண் நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் ஏ கண்கள் வறண்டு போவதை தடுத்து நீரேற்றமாக வைத்திருக்கும்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து, கால்சியம் ஆகியவை கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
அவுரிநெல்லி
அவுரிநெல்லிகளில் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் கண் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாத்து, கண் பார்வையை மேம்படுத்துகின்றன.
மாம்பழம்
லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் ஆகிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள் மாம்பழத்தில் உள்ளன. இவைகள் அதிகப்படியான ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கின்றன.
பேரிச்சம்பழம்
பேரீச்சம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ கண் தசைகளை வலுப்படுத்தி கண் சோர்வைக் குறைக்கிறது.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கண் பார்வை திறனையை அதிகரித்து கண் நோய்கள் வராமல் தடுக்கும்.