நாகப்பட்டினம் எதுக்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?


sreeja kumar
2023-03-20,08:56 IST
www.herzindagi.com

நாகப்பட்டினம்

    இந்தியாவின் முக்கியமான துறைமுகங்களில் நாகப்படினமும் ஒன்று. இதை தவிர நாகப்பட்டினம் மாவட்டம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு என்னென்ன பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்போம்.

டச்சு கோட்டை

    நாகப்பட்டினம் செல்பவர்கள் தாரங்கபாடில் இருக்கும் டச்சு கோட்டையை பார்க்க மிஸ் செய்ய கூடாது. வங்காள விரிகுடாவின் கிழக்கு கடலோரப் சாலையில் அமைந்திருக்கும் இந்த கோட்டை டேனிஷ் கட்டிக்கலையின் அழகை உலகத்துக்கு காட்டும் இடமாக உள்ளது.

பூம்புகார் கடற்கரை

    நாகப்பட்டினத்தின் மொத்த அழகையும் இந்த கடற்கரையில் பார்க்கலாம். வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்திருக்கும் இந்த கடற்கரையில் சித்ரா பெளர்ணமி அன்று கூட்டம் குவியும்.

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில்

    நாகை ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது நெல்லுக்கடை மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் மாரியம்மன் 4 கரங்களை கொண்டு அருள் தருகிறார். மிகவும் சக்தி வாய்ந்த கோயிலில்களில் இதுவும் ஒன்று.

சவுந்தரராஜ பெருமாள் கோயில்

    பஸ் நிலையத்திலிருந்து மிகவும் அருகில் இருக்கும் திருநாகை சவுந்தரராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆதிசேஷன் இந்த தளத்தில் உள்ள ஸாரா புஷ்கரணியில் தவமிருந்து பெருமாளை நேரடியாக தரிசனம் செய்த ஸ்தலம் எனவும் கூறப்படுகிறது.

அருங்காட்சியகம்

    நாகப்பட்டினத்தில் அமைந்திருக்கும் பழமையான அரசு அருங்காட்சியத்தில் சுதந்திரத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமில்லை பண்டையகால ஓவியங்களையும் இங்கு பார்க்கலாம்.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.