திருவண்ணாமலையில் பார்க்க வேண்டிய ரம்மியமான இடங்கள் இம்புட்டு இருக்கு
sreeja kumar
20-03-2023, 20:31 IST
www.herzindagi.com
திருவண்ணாமலை
திருவண்ணாமலை என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் கோயில். உலக புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் பெளர்ணமி, சிவராத்திரி அன்று மிகவும் விசேஷமாக இருக்கும். இதனுடன் இங்கு சுற்றி பார்க்க பல இடங்கள் உள்ளன.
Image Credit : google
சாத்தனூர் அணை
தமிழ்நாட்டில் இருக்கும் மிகப் பெரிய அணைகளில் இதுவும் ஒன்று. மலையும் வளமும், மரங்களும் சூழ நடுவில் அமைந்திருக்கும் இந்த அணை மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும்.
Image Credit : google
ரமண மகரிஷி ஆசிரமம்
மிகச் சிற்ந்த ஆன்மீக ஸ்தலமாக இது பார்க்கப்படுகிறது. இங்கு சென்றால் மனதில் அமைதி பெருகும், நிம்மதி கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருவண்ணாமலை செல்பவர்கள் கட்டாயம் இங்கு செல்லவார்கள்.
Image Credit : google
ரேணுகாம்பாள் திருக்கோயில்
திருவண்ணாமலையிலிருந்து சுமார் 55 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது ரேணுகாம்பாள் திருக்கோயில். இங்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் திருவிழா மிகவும் விசேஷமானது.
Image Credit : google
பர்வதமலை
யோகிகளும் சித்தர்களும் வழிபட்ட மலை என அழைக்கப்படும் பர்வதமலை மிகவும் புகழ்பெற்றது. இம்மலைக்கு செல்ல பாதை வசதி உண்டு. திருவண்ணாமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
Image Credit : google
பெரியநாயகி திருக்கோயில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விஜயநகர கட்ட்டக்கலைக்கு சிறந்த சான்றாக அமைந்துள்ளது பெரியநாயகி அம்மன் ஆலயம். இங்கு சுமார் 10000 க்கும் மேற்பட்ட சிற்பங்களும், 60 கல்வெட்டுகளும் உள்ளன.
Image Credit : google
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.