கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையை சுற்றி பார்க்க இவ்வளவு விஷயம் இருக்கா!


Balakarthik Balasubramaniyan
2023-03-17,14:00 IST
www.herzindagi.com

கோடைக்காலம்

    கோடைக்காலம் வந்துவிட்டாலே பிள்ளைகளுக்கு விடுமுறை பற்றிய எண்ணம் வர தொடங்கிவிடும். எங்கெல்லாம் செல்லலாம்? எப்படி எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்? போன்ற எண்ணங்கள் அவர்கள் மனதில் உண்டாகும். அதற்கு சிறந்தந்தோர் இடம் தான் விவேகானந்தர் பாறை.

தெரிந்துக்கொள்ள வேண்டியவை

    இந்த இடத்தை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நம்மால் கண்டுகளிக்க முடியும். நுழைவுக்கட்டணம் 20 ரூபாய் பெறப்படுகிறது.

படகு பயணம் செல்ல ஆசையா?

    படகில் செல்ல காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு 34 ரூபாய் வீதம் இதற்காக வசூலிக்கப்படுகிறது. நீங்கள் நினைவு மண்டபத்தை பார்க்க விரும்பினால், கூடுதலாக 20 ரூபாய் செலுத்த வேண்டும்.

தியான மண்டபம்

    இங்கே சுற்றுலாப்பயணிகள் தியானம் செய்வதற்கு ஏற்ற சிறந்த தியான மண்டபம் காணப்படுகிறது. இந்த மண்டபம், இந்தியாவின் பல மாநில கட்டிட கலையினை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளது. விவேகானந்தரின் திரு உருவ சிலையையும் நாம் இங்கு காணலாம்.

புராணம் கூறுவது என்ன?

    சுவாமி விவேகானந்தர் ஞானம் பெற்ற இடத்தில் இந்த பாறை தோன்றியதாக சொல்லப்படுகிறது. இந்த பாறை புராண பிரசித்தி பெற்றதும் கூட. இந்த பாறை தான் கன்னியாகுமரி தேவி, சிவபெருமானிடம் பிரார்த்தனை பெற்றதாகவும் நம்பப்படுகிறது.

ஸ்ரீபாத மண்டபம்

    இந்த மண்படத்தில் படிக்கும் அறையும், அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இந்த இடத்தின் மூலமாக நம்மால் விவேகானந்தர் வாழ்க்கை பற்றி ஆழமாக அறிந்து ஞானம் பெற முடிகிறது.

திருவள்ளுவர் சிலை

    திருவள்ளுவர் சிலை, தமிழ்நாட்டில் காணப்படும் அதிசயங்களுள் ஒன்று எனலாம். இந்த சிலை வடிவமைப்பில் அறிவியலும், தொழில்நுட்பமும் மிளிர்வது மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த 133 அடி உயர சிலை, முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்து பிரம்மிப்புடன் நம்மை பார்க்க வைக்கிறது.

எவ்வளவு நேரம் ஆகும்?

    இவ்விடங்களை சுற்றி பார்க்க சுமார் 2 மணி நேரம் வரை ஆகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் விடுமுறை நாட்களில், கூடுதலாக 30 நிமிடங்கள் வரை ஆகலாம்.

அருகில் காணப்படும் மற்ற இடங்கள்

    நீங்கள் விவேகானந்தர் பாறையை சுற்றி பார்த்துவிட்டு அருகில் உள்ள காந்தி நினைவிடம், கன்னியாகுமரி கடற்கரை போன்ற பல அருமையான இடங்களை நீங்கள் குடும்பத்தோடு சுற்றி பார்க்கலாம்.

படித்ததற்கு நன்றி

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.