ஒரே வருடத்தில் அதிக படங்களில் நடித்த டாப் 6 தமிழ் ஹீரோஸ்
Alagar Raj AP
24-04-2025, 16:07 IST
www.herzindagi.com
தமிழ் ஹீரோக்கள்
தற்போதைய முன்னணி தமிழ் ஹீரோக்கள் வருஷத்துக்கு இரண்டு படங்கள் நடிப்பதே அரிதாக உள்ளது. ஆனால் முன்பு, பெரிய நடிகர்கள் எல்லோரும் வருடத்திற்கு குறைந்தது 15 படங்களாவது நடிப்பார்கள். அப்படி ஒரே ஆண்டில் அதிக படங்களில் நடித்த தமிழ் ஹீரோக்கள் லிஸ்ட் இதோ.
சரத்குமார்
தமிழ் சினிமாவில், வில்லன் நடிகராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர்களில் சரத்குமாரும் ஒருவர். அவர் 1990ஆம் ஆண்டில் மொத்தம் 15 படங்களில் நடித்திருக்கிறார்.
விஜயகாந்த்
சினிமா பின்புலம் இல்லாமலேயே திரைத்துறையில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜயகாந்த். அவர் 1984ஆம் ஆண்டில் மட்டும் 17 படங்களில் நடித்திருக்கிறார்.
மைக் மோகன்
1980கள் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோவாக இருந்த மைக் மோகன் 1984ஆம் ஆண்டு 19 படங்களில் நடித்துள்ளார்.
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் தங்க புதையல் என்றே கமல்ஹாசனை கூறலாம். 1978ஆம் ஆண்டில் மட்டும் அவர் நடிப்பில் 19 படங்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த்
தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற்றவர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் 1977ஆம் ஆண்டில் மட்டும் 19 படங்களில் நடித்திருந்தார்.
சத்யராஜ்
தமிழ் சினிமாவில் வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் சத்யராஜ். 1985ஆம் ஆண்டில் மட்டும் அவர் நடிப்பில் 21 படங்கள் வெளியாகியுள்ளன.