அம்பானி வீட்டுத் திருமணத்திற்கான சங்கீத் விழாவின் முக்கிய நிகழ்வுகள்
Alagar Raj AP
08-07-2024, 11:59 IST
www.herzindagi.com
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட் திருமணம் வரும் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய விஷயங்கள் இதோ.
பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் சங்கீத் விழாவில் பாடுவதற்கு ரூ.83 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்.
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் ஆகியோரை நீதா அம்பானி மேடைக்கு அழைத்து பாராட்டினார்.
தங்கள் மருமகள் ராதிகா மெர்ச்சன்டுக்கு துபாயில் தனிப்பட்ட கடற்கரை கொண்ட சொகுசு வில்லாவை அம்பானி நீதா அம்பானி தம்பதி பரிசளித்தனர். இதன் மதிப்பு 640 கோடி ரூபாய் என தகவல்.
கல்யாணம் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட்க்கு என்றாலும் முகேஷ் அம்பானியின் மூத்த மகள் இஷா அம்பானி சங்கீத் நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஆடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அட்லீயும் அவரது மனைவி பிரியாவும் ஒரே மாதிரியான வடிவமைப்பு கொண்ட ஆடையை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முன்னதாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதியர் தங்களது பேரன், பேத்திகளுடன் காரில் பயணம் செய்வது போன்ற வீடியோ சங்கீத் நிகழ்ச்சியின் நல்ல தொடக்கமாக அமைந்தது.