தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீலீலா மருத்துவ மாணவியாக தற்போது இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
அறிமுகம்
இவர் 2019 கன்னட மொழியில் வெளியான கிஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
நடனம்
ஸ்ரீலீலா சிறு வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொண்டதால் நடனத்தில் சிறந்து விளங்குகிறார். தாமாக படத்தின் பல்சர் பைக் பாடலில் அவர் போட்ட குத்தாட்டம் தெலுங்கில் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது.
2023
கடந்த ஆண்டு மட்டும் ஸ்ரீலீலா நடித்த 5 படங்கள் தெலுங்கில் வெளியாகின.
குண்டூர் காரம்
சமீபத்தில் மகேஷ் பாபுக்கு இவர் ஜோடியாக நடித்த குண்டூர் காரம் திரைப்படம் வெளியானது.
விருதுகள்
கன்னடம், தெலுங்கில் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது மற்றும் தெலுங்கில் சிறந்த நடிகைக்கான சைமா விருது உள்ளிட்ட 3 விருதுகளை ஸ்ரீலீலா பெற்றுள்ளார்.
தமிழ் அறிமுகம்
ஸ்ரீலீலா எப்போது தமிழில் அறிமுகமாவார் என இவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஸ்ரீலீலாவின் தமிழ் அறிமுகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.