சுருக்கங்கள், சரும பிரச்சனைகளை நீக்கும் வெண்டைக்காய் தண்ணீர்!
Shobana Vigneshwar
07-10-2023, 20:00 IST
www.herzindagi.com
வெண்டைக்காய் தண்ணீர் பயன்கள்
வெண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இது உங்கள் சருமத்தை அழகாக மாற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா? சருமத்திற்கு வெண்டைக்காய் தண்ணீர் தரும் நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்.
Image Credit : freepik
இயற்கையான மாய்ஸ்சரைசர்
வெண்டைக்காயில் உள்ள பிசுபிசுப்பு தன்மை சருமத்தை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை முகத்திற்கு தடவினால் சரும வறட்சி நீங்கி, சருமம் ஈரத்தன்மையுடன் இருக்கும்.
Image Credit : freepik
வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கும்
வயதான அறிகுறிகளை கட்டுப்படுத்தும் பண்புகள் வெண்டைக்காயில் காணப்படுகின்றன. இவை ஃபிரீ ரேடிகல்களின் சேதத்திலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றன. இது உங்களை இளமையாக வைத்துக் கொள்ள உதவும்
Image Credit : freepik
முகப்பருக்களை நீக்கும்
விடாப்படியான முகப்பருக்களை நீக்க வெண்டைக்காய் உதவும். உங்கள் சருமத்தில் உள்ள முகப்பருக்களை குணப்படுத்த வெண்டைக்காய் தண்ணீரை பயன்படுத்தலாம்.
Image Credit : freepik
வெயிலின் தாக்கத்தை குறைக்கும்
சருமம் அதிக நேரம் வெயிலில் வெளிப்படும் பொழுது சரும பிரச்சனை அதிகரிக்கலாம். வெயிலின் தாக்கத்தை போக்க சருமத்திற்கு வெண்டைக்காய் தண்ணீர் பயன்படுத்தலாம்.
Image Credit : freepik
சருமத்தை பளபளப்பாக மாற்றும்
வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள வைட்டமின்கள் சரும பொலிவை அதிகரிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வர கரும்புள்ளிகள் நீங்கி நல்ல மென்மையான, தெளிவான சருமத்தை பெறலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தக் கருத்துக்கள் யாவும் பொதுவானவையே. உங்கள் உணவில் ஏதேனும் மாற்றங்களை செய்வதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும். மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.