வெள்ளை முடியை கருமையாக மாற்றும் தேங்காய் சிரட்டை… எப்படினு பாருங்க!
Alagar Raj AP
21-03-2024, 14:35 IST
www.herzindagi.com
தேங்காய் சிரட்டை ஹேர் டை
தேங்காய் எண்ணெய், தேங்காய் பால், தேங்காய் தண்ணீர் போன்று தேங்காய் பல்வேறு வழிகளில் தலைமுடிக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தேங்காய் சிரட்டையை பயன்படுத்தி ஹேர் டை செய்யலாம், அது எப்படினு பார்ப்போம்.
ஸ்டேப் 1
தேங்காய் சிரட்டையில் உள்ள நார்களை சுத்தம் செய்து சிரட்டையை நெருப்பில் வைத்து கருப்பாகும் வரை வாட்டவும்.
ஸ்டேப் 2
அதன் பிறகு கருப்பான சிரட்டையை நொறுக்கி தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் 3
நொறுக்கிய சிரட்டையை அம்மியில் வைத்து பொடியாகும் வரை அரைக்கவும்.
ஸ்டேப் 4
அரைத்த பொடியுடன் கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் தலைமுடிக்கு ஹேர் டையை தடவவும்.
ஸ்டேப் 5
வெள்ளை தலைமுடியில் வேர் முதல் நுனி வரை ஹேர் டையை தடவுங்கள்.
ஸ்டேப் 6
அரை மணி நேரம் கழித்து முடியைக் கழுவி சுத்தம் செய்தால் முடியில் கருமையான நிறம் தோன்றும்.