திராட்சை மற்றும் ஆரஞ்சு பழத்தை வைத்து வீட்டிலேயே வாசனை திரவியம் செய்யலாம்


Alagar Raj AP
15-07-2024, 12:36 IST
www.herzindagi.com

    சந்தையில் கிடைக்கும் வாசனை திரவியங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட நபராக நீங்கள் இருந்தால் எந்தத் தீங்கும் ஏற்படாத சிட்ரஸ் பழங்களை கொண்டு வீட்டிலேயே வாசனை திரவியம் தயாரிப்பது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

    10 சொட்டு திராட்சை சாறு, 10 சொட்டு ஆரஞ்சு சாறு, 5 சொட்டு லாவெண்டர் எண்ணெய், 5 டீஸ்பூன் ஜோஜோபா எண்ணெய், 2 சொட்டு ஆல்கஹால் மற்றும் 250 மி.லி தண்ணீர்.

ஸ்டெப் 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் ஜோஜோபா எண்ணெய் மற்றும் ஆல்கஹால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 2

    அதன் பின் திராட்சை சாறு, ஆரஞ்சு சாறு மற்றும் லாவெண்டர் எண்ணெய் ஆகியவற்றை ஜோஜோபா எண்ணெயுடன் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 3

    அடுத்ததாக அதில் 250 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைத்து கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டெப் 4

    இந்த பொருட்கள் அனைத்தையும் நன்கு கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி இரண்டு நாட்கள் ஊற வைத்து பயன்படுத்தலாம்.

    திராட்சை மற்றும் ஆரஞ்சு ஆகிய சிட்ரஸ் பழத்தில் தயாரிக்கப்பட்ட இந்த வாசனை திரவியம் உங்கள் சருமத்தை நறுமணத்துடன் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.