லிப்ஸ்டிக் போடாமல் உதடுகள் சிவப்பாக வேண்டுமா? இதை ட்ரை பண்ணிப்பாருங்க!
Jansi Malashree V
17-03-2024, 08:50 IST
www.herzindagi.com
பெண்கள் அனைவருக்கும் உதடுகள் சிவப்பாக இருக்கம் என்று கூறமுடியாது. பலரது உதடுகள் கருப்பாக இருப்பதால் லிப்ஸ்டிக் போன்றவற்றைப் பயன்படுத்தி அழகாக்குகிறார்கள். இது நிரந்தமும் இல்லை. உடலுக்குப் பாதுகாப்பும் இல்லை.
கருப்பாகக் காரணம்?
சூரிய ஒளியின் தாக்கம் மற்றும் இறந்த செல்கள் உதடுகளின் மீது படிதல், உதடுகள் வறண்டு விடுதல், வைட்டமின் குறைபாடு, ஈரப்பதம் இல்லாதது போன்ற பல்வேறு காரணமாக உதடுகள் கருமை நிறமாகிறது.
லிப்ஸ்டிக் பாதிப்பா?
உதடுகள் சிவப்பாக வேண்டும் என்பதற்காக, கடைகளில் விற்பனையாகும் அழகுச்சாதனப் பொருள்களை அதிகளவில் பெண்கள் பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு இது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிலருக்கு உதடுகளில் புண் மற்றும் உதடுகள் கருப்பாகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வீட்டு வைத்தியம்:
கெமிக்கல் தயாரிப்புகளைப் பயன்படுத்தி உதடுகளில் இனி மேல் எவ்வித பிரச்சனைகளையும் ஏற்படுத்த வேண்டும். நம்முடைய வீடுகளில் உள்ள எளிய பொருட்களைப் பயன்படுத்தி உதடுகளை அழகாக்க முடியும்.
பாதாம் :
உதடுகளை சிவப்பாக மாற்றுவதற்கு பாதாம் பொடி மற்றும் பால் க்ரீம் இரண்டையும் ஒன்றாக கலந்து உதடுகளில் அப்ளை செய்யவும். இதில் வைட்டமின் ஈ மற்றும் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் உதடுகளை ஈரப்பதமாக்குவதோடு கருமை நிறம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
மாதுளை:
உதடுகளில் உள்ள கருமை நிறம் மறைவதற்கு மாதுளை சிறந்த தேர்வாக அமையும். மாதுளை லேசாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்துக் கொள்ளவும். இதை தினமும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது பயன்படுத்தி வந்தால் உதடுகள் சிவப்பாகும்.
கற்றாழை ஜெல்:
கற்றாழையில் ஈரப்பதமூட்டும் பண்புகள் அதிகளவில் உள்ளதால் உதடுகளைப் பாதுகாக்க உதவுகிறது. உதடுகள் ஈரப்பதத்துடன் இருக்கும் போது வறண்டு விடாது. எனவே கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் சேர்த்து தடவ வேண்டும்.