உடல் ஆரோக்கியத்திற்கு தக்காளி எவ்வளவு நன்மைகளை அளிக்கிறதோ அதே போல் சரும ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கிறது. தக்காளியை முகத்தில் பயன்படுத்துவதால் சருமத்திற்கு பல நன்மைகள் இருக்கிறது.
முகப்பரு நீங்கும்
தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை உங்கள் சருமத்தின் pH அளவை பராமரிக்க உதவுகிறது. இதனால் முகப்பருவை குறைக்க முடியும்.
எண்ணெய் உற்பத்தி குறையும்
எண்ணெய் சருமத்தோடு போராடுபவர்கள் தக்காளியை முகத்தில் பயன்படுத்தலாம். தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை தடுத்து முகத்தில் பொலிவை அதிகரிக்கும்.
சரும நீரேற்றம்
வறண்ட சருமத்தை மீட்டெடுத்து நீரேற்றமாக வைக்க தக்காளி உதவுகிறது. தக்காளியில் உள்ள கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சரும வறட்சியை நீக்கும்.
பிரகாசமான சருமம்
முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் தக்காளி கொடுக்கின்றன. இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் மந்தமான சருமத்தைப் பிரகாசமாக்கும்.
சரும பாதுகாப்பு
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி அரணாக செயல்பட்டு சருமத்தை சூரியனின் புற ஊதா கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கிறது.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவுங்கள். அடுத்ததாக பாதியாக நறுக்கிய தக்காளியை முகத்தில் 5-10 நிமிடங்கள் நன்கு தேய்க்கவும். பின்னர் முகத்தை தண்ணீரில் கழுவவும். இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்தால் முக வசியம் அதிகரிக்கும்.