விஜயதசமி தினத்தில் இதை செய்தால் உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்
Alagar Raj AP
10-10-2024, 17:37 IST
www.herzindagi.com
விஜயதசமி தேதி
நவராத்திரி இந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி துவங்கி அக்டோபர் 11ம் தேதி வரை உள்ளது. இந்த நவராத்திரி நாட்கள் முடிந்து வரும் பத்தாவது நாள் அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை விஜயதசமி அல்லது தசரா என்று கொண்டாடப்படுகிறது.
விஜயதசமி கொண்டாட காரணம்
அம்பிகை ஒன்பது நாட்கள் அசுரர்களுடன் போரிட்டு 10வது நாள் வெற்றி பெற்ற தினம் தான் விஜயதசமி. அம்பிகையின் வெற்றியை கொண்டாடும் விதமாக தான் ஆண்டுதோறும் விஜயதசமி அல்லது தசரா கொண்டாடப்படுகிறது.
வெற்றிக்கான விஜயதசமி
அம்பிகையின் வெற்றியை விஜயதசமியில் அம்மனை வழிபட்டு கொண்டாடினால் நம் வாழ்விலும் வெற்றிக்கான கதவு திறக்கும் என்பது ஐதீகம். எனவே வாழ்க்கையில் வெற்றி பெற விஜயதசமி தினத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
வித்யாரம்பம்
வாழ்க்கையில் வெற்றிக்கான அச்சாணியிடுவது முதலில் கல்வி தான். இதற்கு உங்கள் வீட்டில் உள்ள மழலை குழந்தைகளை நெல்லில் ‘அ’ என்று எழுத வைத்து கல்வியை தொடங்குங்கள். இப்படி கல்வியை தொடங்குவதன் மூலம் சரஸ்வதி தேவியின் அருளால் அக்குழந்தை கல்வியில் சிறந்து விளங்குவர்.
தொழில்
இந்த நன்னாளில் புதிய தொழில்களை தொடங்குவது வெற்றியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. விஜயதசமியில் தொழில் தொடங்கினால் தொழில் வளம் சிறக்கும்.
சொத்துக்கள்
நகை, இடம், வாகனம் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களை விஜயதசமி தினத்தில் வாங்குவதால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
நல்ல நேரம்
விஜயதசமி அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் நல்ல நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அம்பிகைக்கு மலர்கள், பழங்கள் சுண்டல், பொரி, இனிப்பு வகைகள் வைத்து வழிபட்டால் எல்லா காரியங்களிலும் வெற்றி நிச்சயம்.