herzindagi
carrot  masala recipe

மொறு மொறுன்னு கேரட்டில் 65 மசாலா செய்திருக்கீங்களா? இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்!

குழந்தைகள் விரும்பும் மொறு மொறு கேரட் 65 மசாலா செய்முறை டிப்ஸ்.
Editorial
Updated:- 2024-09-06, 19:12 IST

சிக்கன் 65, கோபி மஞ்சூரியன், காளான் 65 தான் இதுவரை வழக்கமாக அதிகம் சாப்பிடுவோம். இந்த வரிசையில் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு நாவிற்கு அதிக சுவையைக் கொடுக்கும் கேரட்டை வைத்து எப்படி கேரட் 65 மசாலா செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால் இதோ உங்களுக்கான ரெசிபி டிப்ஸ் இதோ.

carrot  recipes making

மொறு மொறு கேரட் 65 மசாலா ரெசிபி:

தேவையான பொருட்கள்:

  • கேரட்- 100 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - சிறிதளவு
  • உப்பு- சிறிதளவு
  • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
  • கார்ன் ப்ளவர் - சிறிதளவு
  • அரிசி மாவு - சிறிதளவு
  • எலுமிச்சை  சாறு - ஒரு சிட்டிகை
  • நறுக்கிய வெங்காயம் - 1 கப்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • வறுத்த கடலை பருப்பு - சிறிதளவு
  • சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வத்தல் - 5

செய்முறை:

  • கேரட் 65 மசாலா ரெசிபி செய்வதற்கு முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் கேரட்டை நன்கு கழுவிய பின்னதாக தோல் சீவிக் கொண்டு வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • நறுக்கிய கேரட்டுடன் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது கார்ன் ப்ளவர் மற்றும் அரிசி மாவு சிறிதளவு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். மசாலாக்கள் கேரட்டில் பிடிக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கலந்துக் கொள்ள வேண்டும். கேரட் 65 க்கான பொருட்கள் இப்போது தயார்.
  • பின்னர் மசாலா செய்வதற்கு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகாய் வத்தல் 5 மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொண்டு தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட்டை பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போன்றவற்றை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக் கொண்ட பின்னதாக அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்துக் கொள்ளவும்.

snacks making

  • ஒரு 5 நிமிடங்களுக்குப் பின்னதாக பொரித்து வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து நன்கு கிளறிவிட்டால் போதும். சுவையான கேரட் 65 மசாலா ரெடி.
  • ஒருவேளை உங்களுக்கு குழந்தைகளுக்குக் காரம் பிடிக்கவில்லையென்றால், கேரட் மட்டும் பொரித்து எடுத்த பின்னதாக அப்படியே சாப்பிட கொடுக்கலாம். சுவை வேற லெவலில் இருக்கும். 

 Image source - Google 

 

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com