அசைவ உணவுகளில் சுவையும் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் கறி தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வெரட்டிகளை செய்யலாம். அதிலும் மட்டனை எண்ணெயில் சுண்ட வறுத்து தண்ணீர் சேர்க்காமல் செய்யப்படும் மட்டன் சுக்கா அசைவ பிரியவர்களின் ஃபேவரெட் டிஷ்.
இதை இட்லி, தோசை, பரோட்டா என டிபன் வகைகளுக்கும் வைத்து சாப்பிடலாம். அப்படியில்லை என்றால் பிரியாணி, குஸ்கா, புலா, வெறும் சோறு என சாப்பாட்டுக்கும் வைத்து சாப்பிடலாம். எனவே, இந்த பதிவில் வாயில் எச்சில் ஊற வைக்கும் மட்டன் சுக்கா எப்படி செய்வது? என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் - ½ கிலோ
- நெய் - 3 டீஸ்பூன்
- வெங்காயம் - 1
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 4
- பட்டை - 2
- கிராம்பு - 3
- பூண்டு - 3
- தனியா - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
மட்டன் சுக்கா செய்முறை
- முதலில் அடுப்பில் குக்கரை வைத்து நெய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பின்பு அதில் மட்டனை சேர்த்து நன்கு கலந்து, உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.
- இப்போது மட்டனை 4 விசில் விட்டு வேக வைக்கவும்.
- பின்பு, அடுப்பில் கடாயை வைத்து அதில் மிளகு, பட்டை, சீரகம், கிராம்பு, தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இப்போது இதை மிக்ஸியில் பேஸ்ட் போல் மைய அரைத்து எடுத்து கொள்ளவும்.
- பிறகு, மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்க்கவும்.
- இப்போது அதில் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து 20 நிமிடம் வேக விடவும். தண்ணீர் சேர்க்கமால் எண்ணெயில் மட்டன் பிரிந்து வர வேண்டும்.
- இப்போது உப்பு மற்றும் காரம் பார்த்து இறக்கினால் சூப்பரான மட்டன் சுக்கா வறுவல் தயார். ஒரு பிடி பிடிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கமகமக்கும் கொத்து பரோட்டா செய்முறை
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik