• Search
Close
எதையாவது தேடுகிறீர்களா?
Search

    காரசாரமான பூண்டு பொடி ரெசிபி

    இட்லி பொடிக்கு பதிலாக ஏதாவது வித்யாசமாக முயற்சி செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த பூண்டு பொடியை முயற்சி செய்து பாருங்கள்…
    author-profile
    Updated -08 Mar 2023, 13:30 IST
    Next
    Article
    spicy garlic powder recipe

    பொதுவாக குழம்பில் பூண்டு சேர்த்தால் அதை ஒதுக்கி வைத்து சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால் பூண்டை வைத்து செய்த கார்லிக் பரோட்டா, கார்லிக் பிரட் போன்ற உணவுகளுக்கு ரசிகர்கள் ஏராளம். பூண்டை இப்படி துருவியோ அல்லது பொடியாகவோ சாப்பிட தான் பலரும் விரும்புகின்றனர். பூண்டை முழுசாக சாப்பிட மறுக்கும் பெரியவர்களுக்கும், வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த பூண்டு பொடி செய்து கொடுக்கலாம்.

    நல்ல மொறுகளாக ஊற்றிய தோசை மீது, மலை சாறல் போல இந்த பூண்டு பொடியை தூவி, சுற்றி நல்லெண்ணெய் விட்டு சாப்பிட்டு பாருங்கள். ஆஹா! ஒன்றோடு நிச்சயம் நிறுத்திவிட முடியாது. இதை வைத்து பூண்டு பொடி இட்லியும் செய்யலாம். நாவூரும் சுவைமிக்க இந்த பூண்டு பொடியின் செய்முறையை இப்போது பார்க்கலாம்.

     

    இந்த பதிவும் உதவலாம்: பைன்-ஆப்பிள் கேசரி செய்வது எப்படி?

    தேவையான பொருட்கள்

    garlic podi for idly

    • எண்ணெய் - 1 டீஸ்பூன் 
    • பூண்டு - 1/4 கப் துருவியது 
    • வேர்க்கடலை - 1 டீஸ்பூன்
    • எள் - 1 டீஸ்பூன்
    • சீரகம் - 1 டீஸ்பூன்
    • தனியா - 1 டீஸ்பூன்
    • வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
    • காய்ந்த சிவப்பு மிளகாய் - 2-4(காரத்திற்கு ஏற்ப)
    • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
    • உலர் மாங்காய் பொடி- 1 டீஸ்பூன் 
    • பெருங்காயம்- 1 சிட்டிகை 
    • உப்பு - தேவையான அளவு 

    செய்முறை

    garlic dry chutney

    • பூண்டு பொடி செய்வதற்கு, முதலில் ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
    • பின் சூடான எண்ணெயில் 1/4 கப் துருவிய பூண்டை சேர்த்து, பொன்னிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும்.
    • பூண்டு வறுபட்டவுடன் 1 டீஸ்பூன் வேர்க்கடலை சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
    • அடுத்ததாக காய்ந்த சிவப்பு மிளகாய், எள், சீரகம், தனியா மற்றும் வெந்தயம் சேர்த்து வதக்கி ஆற விடவும்.
    • இந்த கலவை ஆறிய பின், இதனுடன்  மஞ்சள் பொடி, உலர் மாங்காய் பொடி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
    • பூண்டு பொடி தயார். இந்த சட்னியை இட்லி, தோசையுடன் அல்லது சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

     

    இந்த பதிவும் உதவலாம்: ருசியோ ருசி.. மட்டன் சுக்கா வறுவல்

     

    கவனிக்க வேண்டிய விஷயங்கள் 

    • பொருட்களை வறுக்க குறைந்த அளவு எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பொடி பதம் வராது.
    • சட்னி செய்வதற்கு நல்ல பூண்டை மட்டுமே பயன்படுத்த வேண்டாம். முளைவிட்ட அல்லது பழுத்த பூண்டு பொடியின் சுவையை கெடுத்துவிடும். 
    • நீங்கள் விரும்பினால், காய்ந்த மிளகாய்க்கு பதிலாக மிளகாய் பொடியையும் பயன்படுத்தலாம்.

    இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

    image source:freepik

    பொறுப்புத் துறப்பு

    உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com