pineapple kesari : பைன்-ஆப்பிள் கேசரி செய்வது எப்படி?

கல்யாண வீட்டில் பரிமாறப்படும் பைன்-ஆப்பிள் கேசரி செய்வது எப்படி? என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

Sreeja Kumar
kesari recipe tamil

கல்யாண வீட்டில் செய்யப்படும் கேசரிக்கு தனி ரசிர்கள் கூட்டமே இருக்கிறது. மண்டபத்திற்குள் நுழையும் போதே வாசனை ஆளை இழுக்கும். பந்தியில் அமர்ந்தவுடன் முதலில் இலையில் பரிமாறப்படும் ஸ்வீட்டாகவும் இது உள்ளது. அதிலும் குறிப்பாக பிரியாணியுடன் பரிமாறப்படும் கேசரி தனி சுவையில் இருக்கும். மற்ற ரவா கேசரிகளை போல் இல்லாமல் செம்ம சாப்டாக, உதிரி உதிரியாக இருக்கும் இந்த கேசரி பெரும்பாலும் அன்னாசிப்பழ ஃபேலவரில் செய்யப்படும். பைன்-ஆப்பிள் கேசரி எனச் சொல்லப்படும் இந்த கேசரி குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. வீட்டிலும் எளிமையாக செய்யலாம்.

இந்த பதிவில் வீட்டிலேயே அசத்தல் சுவையில் பைன் - ஆப்பிள் கேசரி செய்வது எப்படி? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

  • நெய் - தேவையான அளவு
  • உலர் திராட்சை - 1டீஸ்பூன்
  • வறுத்த ரவா - 1 கப்
  • வெந்நீர் - 3 கப்
  • சர்க்கரை - 1.1/2 கப்
  • பைன் - ஆப்பிள் எசெனஸ் - 2 டீஸ்பூன்
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்

kalyana kesari

செய்முறை

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி முந்திரி சேர்த்து வறுத்து எடுக்கவும்.
  • பின்பு அதே கடாயில் வறுத்த ரவை சேர்த்து 5 நிமிடம் வறுக்கவும்.
  • அதில் இப்போது வெந்நீர் சேர்த்து கரண்டியை வைத்து விடாமல் கிளறவும். இப்போது அதில் பைன் - ஆப்பிள் எசெனஸ் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
  • அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் கமகம கல்யாண வீட்டு பைன் - ஆப்பிள் கேசரி தயார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Disclaimer