ஹோலி அன்று வீட்டின் முற்றத்திலும் பூஜை அறையிலும் அழகான ரங்கோலியை அலங்கரிக்கப்படாவிட்டால், பண்டிகை கொண்டாட்டம் முழுமையடையாது. தீபாவளி அன்று முற்றத்தில் அழகான ரங்கோலி போடுவோம், ஆனால் ஹோலி தினத்தன்று கூட முற்றத்தில் ரங்கோலி போடுவது மங்களகரமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ரங்கோலி மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியின் சின்னமாகவும் உள்ளது. ஹோலி நாளில், மக்கள் ஒருவருக்கொருவர் நிறங்களை பூசி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள், அதே நேரத்தில் குழந்தைகள் தண்ணீர் பலூன்களால் ஒருவருக்கொருவர் வண்ணங்களை தெளித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.
இந்த வண்ணத் திருவிழாவின் போது, நீங்கள் உங்கள் முற்றத்தை ரங்கோலியால் அலங்கரிக்க விரும்பினால், வீட்டின் முற்றத்திலும் பூஜை அறைகளிலும் நீங்கள் போட வேண்டிய மிகவும் எளிதான மற்றும் பிரபலமான வடிவமைப்புகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். வெவ்வேறு வண்ணங்களில் உருவான ரங்கோலிகள் பற்றி பார்க்கலாம்.
இதுவும் உதவலாம் : ஹோலி வண்ணங்களால் ஏற்படும் சரும பாதிப்பை தடுப்பது எப்படி?
நீங்கள் கூட்டுக் குடும்பத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் சேர்ந்து ரங்கோலியை உருவாக்க முயற்சிக்கவும். இது உங்களை ஒருவரையொருவர் நெருக்கமாக்கும், மேலும் இதை உருவாக்கும் போது நீங்கள் மிகவும் மகிழ்வீர்கள்.
இந்த படத்தில் இருக்கும் ரங்கோலி போடுவதற்கு முன்பு சாக் பீஸ் உதவியுடன் ஒரு வடிவமைப்பை உருவாக்கவும். பின்பு வண்ண கோலப் பொடிகளை பயன்படுத்தவும். ஹோலி அன்று போடுவதற்கு இது சிறந்த கோலமாக இருக்கும்
ரங்கோலியை அலங்கரிக்க நீங்கள் மலர்களின் இதழ்கள், விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளைப் பயன்படுத்தலாம்.
இந்த படத்தில் இருக்கும்படி பூ கோலங்கள் வரைந்து அவற்றின் நடுவில் ஹேப்பி ஹோலி என்று எழுதுவதும் கோலத்தை மிகவும் அழகாக்கும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.