herzindagi
image

இந்த ஆண்டு வசூல் சாதனை செய்த சின்ன பட்ஜெட் தமிழ் படங்கள்; லிஸ்ட் இதோ

2024 ஆம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் வெளியாகி கோலிவுட் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த சிறந்த நான்கு திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 
Editorial
Updated:- 2024-12-02, 14:18 IST

2024 ஆம் ஆண்டு கோலிவுட் திரை உலகை பொறுத்தவரையில் பெரிய ஹீரோக்களின் படங்கள் எதுவும் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியாகி எதிர்பாராத அளவு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்தது. அந்த ஒரு சில படங்களும் சிறிய பட்ஜெட்டில் உருவான திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தியேட்டர்களில் வெளியான சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் அதிக அளவு மக்களை ஈர்த்துள்ளது. படம் வெளியாகி மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு ஓடிடி தளத்தில் அதே திரைப்படங்கள் வெளியாகி இணையத்திலும் ட்ரெண்டிங் வைரலானது. அந்த வரிசையில் 2024 ஆம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் வெளியாகி கோலிவுட் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த சிறந்த நான்கு திரைப்படங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

மகாராஜா:


இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி சாச்சனா நடராஜன் நட்டி அனுராக் காஷ்யப் மம்தா மோகன்தாஸ் அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மகளாக சாச்சனா நடித்திருந்தார். ஒரு சலூன் கடை நடத்தும் தந்தை மற்றும் அந்த தந்தை தான் உலகம் என்று வாழும் மகள் இவர்கள் இருவருக்கும் இடையிலான அன்பு பாசம் தான் இந்த திரைப்படத்தின் கதைகளம். தியேட்டர்களில் வெளியாகி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற பிறகு மகாராஜா திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வெறும் 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 110 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது.

லப்பர் பந்து:


ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லப்பர் பந்து. இந்த திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, கீதா கைலாசம், தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசான லப்பர் பந்து 2024 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் லிஸ்டில் ஒன்று. 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த லப்பர் பந்து திரைப்படம் ரிலீசுக்கு பிறகு 44,36 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த திரைப்படத்தை நீங்கள் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

lubber-pandhu-movie

வாழை:


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் வாழை. இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு மற்றும் வசூல் சாதனை செய்த பிறகு நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இதுவும் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான்.

vaazhai-1724390034

லவ்வர்:


2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியான திரைப்படம் லவ்வர். இந்த திரைப்படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் இந்த திரைபடத்தில் மணிகண்டன் ஸ்ரீ கௌரி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாதாரண ஒரு காதல் ஜோடி நடுவே வரும் சின்ன சின்ன சண்டைகளும் பெரிய அளவில் வெடிக்கும் பிரச்சனைகளும் தான் லவ்வர் படத்தின் கதைகளம். இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன சமயத்தில் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஆனால் லவ்வர் திரைப்படம் சில நாட்களில் சரியான ரசிகர்களை சென்றடைந்து வெற்றி பெற்றது. மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com