-1733215890992.webp)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் தியேட்டர்களில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் வேட்டையன். தா.ஜெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், பகத் பாசில், ராணா தகுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வேட்டையன். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் வெளியான பேன் இந்தியா படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வேட்டையன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
தங்க கடத்தல் பின்னணியை வைத்து உருவாகும் இந்த கூலி திரைப்படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் ரன்வீர் சிங், தெலுங்கு சினிமா பிரபலம் நாகார்ஜுனா, சத்யராஜ், ஷோபனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் என்று ஓர் நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக 34 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தை முடித்து பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஜெய்லர் படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகளை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே தொடங்கியுள்ளார். இந்த வரிசையில் இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் டிசம்பர் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
1991 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரவிந்த்சாமி, ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தளபதி. இந்த திரைப்படம் ரஜினிகாந்தின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றி மைல்கல்லாக மாறியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சுமார் 34 வருடதிற்கு பிறகு மணிரத்னம் ரஜினிகாந்த் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இந்த ஆண்டு வசூல் சாதனை செய்த சின்ன பட்ஜெட் தமிழ் படங்கள்; லிஸ்ட் இதோ
இந்த நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் தக் லைப் திரைப்பட வேலைகளில் பிஸியாக உள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிகர் த்ரிஷா அசோக் செல்வன் ஐஸ்வர்யா லட்சுமி என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. எனவே இந்த தக் லைப் திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு ரஜினி திரைப்படத்தின் பணிகளை இயக்குனர் மணிரத்னம் துவங்க திட்டமிட்டுள்ளார்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com