
தமிழ் சினிமாவில் கார்த்தியை வைத்து சிறுத்தை படம் இயக்கிய சிவா தற்போது அவரது அண்ணன் சிங்கம் சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் யோகி பாபு, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் கவனித்து கொள்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். படத்தை தமிழ் வருடப்பிறப்பையொட்டி திரையரங்குகளுக்கு கொண்டுவருவதற்கான அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. ஏப்ரல் 11ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளையொட்டி படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. 7ஆம் அறிவு படத்திற்கு பிறகு சூர்யா மிக வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதால் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் படிங்க ஹோம்லி லுக்கில் நடிகை மாளவிகா மோகனன்
கோவாவில் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் செட் அமைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யா மீது ரோப் கேமரா எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்துள்ளது. தலையில் விழுந்திருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் ரோப் கேமரா தோள் மீது விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிங்க தெலுங்கு நடிகரின் முகத்திரையை கிழித்த விசித்ரா
நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்படவே படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் போது வேறு சிலருக்கும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. விபத்து தொடர்பான தகவல்களை ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தொலைக்காட்சிகளுக்கு தெரிவித்துள்ளார்.தற்போது சூர்யா ஓய்வில் இருப்பதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#BREAKINGNEWS | கங்குவா படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்து..#NewsTamil24x7 | #Kanguva | #ShootingSpot | #Accident | #Suriya | #Siva | #BreakingNewspic.twitter.com/J8IgUKLdYX
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) November 23, 2023
கங்குவா படத்தை 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பத்திற்கும் மேற்பட்ட மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ள தயாரிப்பு நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள விபத்தால் வருத்தத்தில் உள்ளது. சூர்யா விரைவில் நலம்பெற வேண்டி ரசிகர்களும் அவருக்கு இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com