
குளிர்காலங்களில் வீட்டில் மட்டுமல்ல நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய குளிர்சாதனப் பெட்டியிலும் அதிக ஈரப்பதத்தோடு துர்நாற்றம் வீசக்கூடும். இதை முறையாக சுத்தம் செய்த தவறும் பட்சத்தில் கிருமிகள் அதிகமாக உற்பத்தியாவதோடு, அதனுள் வைத்திருக்கும் பொருட்களும் விரைவில் கெட்டு விடும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் கட்டாயம் சில டிப்ஸ்களைப் பின்பற்ற வேண்டும். இதோ என்னென்ன? என்பது குறித்த டிப்ஸ்கள் இங்கே.
மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக விரைவில் காய்கறிகள் அழுகுதல், காற்றோடமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் குளிர்சாதன பெட்டிக்குள் பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சிப் பெறக்கூடும். இதனால் ஒரிரண்டு நாட்களுக்குள்ளாகவே குளிர்சாதன பெட்டிக்குள் அதிக துர்நாற்றம் ஏற்படுகிறது. காய்கறிகள் தவிர பால், தயிர் போன்ற அனைத்துப் பொருட்களையும் ப்ரீட்ஜில் வைக்கும் போதும் துர்நாற்றம் அதிகம் வரக்கூடும்.
மேலும் படிக்க: சிறிய வீட்டையும் அழகாக மாற்றுவதற்கான டிப்ஸ்கள்!
குளிர்சாதன பெட்டியில் வரக்கூடிய துர்நாற்றத்தைப் போக்குவதற்கு எலுமிச்சை சிறந்த தேர்வாக அமையும். ஆம் உள்ளே வைத்துள்ள பொருட்களைக் கெட்டு போகும் போது அல்லது அதிக நாட்கள் வைத்திருக்கும் பொருட்களால் ஏற்படக்கூடிய துர்நாற்றத்தைப் போக்க வேண்டும் என்றால் எலுமிச்சை பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை குளிர்சாதன பெட்டியினுள் வைக்கும் போது, துர்நாற்ற வாசனையை உறிஞ்சுவதற்குப் பயனுள்ளதாக உள்ளது.
இதோடு மட்டுமின்றி வினிகரை குளிர்சாதன பெட்டியின் துர்நாற்றத்தைப் போக்குவதற்குப் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் அல்லது கண்ணாடி டம்ளரில் வினிகரை எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதை குளிர்சாதன பெட்டியில் அப்படியே உள்ளே வைக்கும் போது அதில் வரக்கூடிய வாசனை கொஞ்சம் கொஞ்சமாக மறைய நேரிடும்.
வினிகரைப் போன்று பேக்கிங் சோடாவையும் பயன்படுத்தலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கரைத்து அதனுடன் சிறிது வினிகர் சேர்த்து அதை குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். இவ்வாறு செய்யும் போது ப்ரிட்ஜில் உள்ள வாசனை கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற உதவக்கூடும்.
மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றினாலும் அதிக துர்நாற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றால், முதலில் குளிர்சாதன பெட்டியை அவ்வப்போது சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள ரேக்குகள் அனைத்தையும் அகற்றி அவற்றை வெதுவெதுப்பான நீருடன் சிறிதளவு சோப்பு கலந்து சுத்தம் செய்யவும்.
மேலும் படிக்க: குறைந்த பட்ஜெட்டில் வீட்டை அலங்கரிப்பதற்கான சில யோசனைகள்!
பழைய பழங்கள், காய்கறிகள் போன்றவை அழுகும் நிலையில் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்றி விட வேண்டும். சீக்கிரம் அழுகக்கூடிய பூண்டு, வெங்காயம் போன்றவற்றை காற்று புகாத கொள்கலனில் அடைத்து வைக்கும் போது துர்நாற்றத்தைத் தவிர்க்க முடியும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com