கடல் உணவைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் மீன் சாப்பிட தான் விரும்புகிறார்கள். இது ஒமேகா -3 நிறைந்தது மட்டுமல்ல, அதிக அளவு வைட்டமின் A, ஜிங்க், கால்சியம், இரும்பு மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளன. இதன் காரணமாக, இதயம் முதல் நோயெதிர்ப்பு மண்டலம் வரையும், எடை இழப்புக்கும், உங்கள் சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
ஆனால் கடல் உணவுகளை சாப்பிடாதவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மீனில் இருந்து பெறக்கூடிய ஆரோக்கியம் தரும் நன்மைகளை இழந்து விடுகிறார்கள். இருப்பினும், நீங்கள் மீன் சாப்பிடாவிட்டாலும், அதற்கு மாற்றாக மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். எனவே, இன்று இந்தக் கட்டுரையில், மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய நன்மைகள் என்ன என்பதை மத்திய அரசு மருத்துவமனையான ESICயின் உணவியல் நிபுணர் ரிது பூரி அவர்கள் உங்களுக்குக் கூறுகிறார்.
இதுவும் உதவலாம் : ஆரோக்கியத்திற்கு எந்த சமையல் எண்ணெய் சிறந்தது தெரியுமா?
சருமத்திற்கு நன்மை பயக்கும்
நீங்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்ளும் போது, அதன் விளைவு உங்கள் சருமத்தில் மிக நன்றாகவே தெரியும். உங்கள் சருமம் முன்பை விட மிருதுவாக மாறும் மற்றும் வறட்சி ஏற்படாது. இது மட்டுமின்றி, உங்கள் சருமத்தின் தன்மையையும் மேம்படுத்துகிறது. மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால், உங்கள் சருமம் நீண்ட காலத்திற்கு இளமையாகவே இருக்கும்.
தசைகளை வலுவாக்குகிறது
மீன் எண்ணெய் மாத்திரைகள் உங்கள் தசைகளை திடப்படுத்தவும் உதவியாக இருக்கும். நீங்கள் தொடர்ந்து உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி செய்து வருபவர் என்றால், மீன் எண்ணெய் மாத்திரைகளை நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் தசைகள் விரைவாகவும் இயற்கையாகவும் எளிதில் கட்டுக்கோப்பாக மாறுகிறது.
இதயத்திற்கு நலம் பயக்கிறது
மீன் எண்ணெய் மாத்திரைகள் இதயத்திற்கு மிகவும் நல்லது என்ற விஷயம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இது நீண்ட காலத்திற்கு இதய நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இது LDL அதாவது உடலின் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடுHDL, அதாவது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், உடலில் உள்ள அதிகப்படியான ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது. இதனால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் பெருமளவு குறைக்கப்படுகிறது.
மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலை அதிகரிக்கும்
மூளை தொடர்பான நோய்களின் அறிகுறிகளைக் குறைக்கவும் மீன் எண்ணெய் மாத்திரைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மீன் எண்ணெய் மாத்திரைகளை உட்கொள்ளும்போது, அது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக அல்சைமர் அல்லது டிமென்ஷியா போன்ற மனநலப் பிரச்சனைகளை நீண்ட காலத்திற்கு நம்மிடம் இருந்து எளிதாக விலக்கியே வைக்கலாம். இந்த மாத்திரைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுவதோடு உங்கள் மனதை மேலும் சுறுசுறுப்பாக மாற்றி உங்களை சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.
இதுவும் உதவலாம் : பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்
நீங்கள் ஆர்த்தரிடிஸ் நோயாளியாக இருந்தால் அல்லது தொடர்ந்து மூட்டு வலி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால், மற்ற நடவடிக்கைகளுடன் சேர்த்து, நீங்கள் மீன் எண்ணெய் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மாத்திரைகளில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இதன் காரணமாக அவை மூட்டுகளில் காலை நேரத்தில் ஏற்படும் விறைப்பு தன்மை, மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குறைக்க உதவியாக இருக்கிறது. இத்துடன், அவற்றை உட்கொள்வதன் மூலம் உங்கள் எலும்புகளின் அடர்த்தியும் மேம்பட்டு விடும். அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் மூட்டு வலியில் இருந்து நல்ல நிவாரணம் பெறுவீர்கள்.
மீன் எண்ணெய் மாத்திரைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால்அதனை சாப்பிட தொடங்கும் முன்னர், நீங்கள் ஒரு முறை உணவு நிபுணரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிட வேண்டும்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik