தேங்காய் எண்ணெய் இல்லாத வீடுகளை பார்ப்பது அரிது. சமையல் முதல் கூந்தல் மற்றும் சரும பராமரிப்பு வரை பல தேவைகளுக்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்துகிறோம். தேங்காய் எண்ணெயின் பயன்களை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதிலும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
பெரும்பாலானவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் வெந்நீர், டீ, காபி அல்லது ஏதேனும் பானம் குடிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு மாற்றாக தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். இதை பின்பற்றிய ஒரு சில நாட்களிலேயே நல்ல முன்னேற்றங்களையும் பார்க்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது நல்லதா?
நம் உடலுக்கு அத்தியாவசியமான நல்ல கொழுப்புகள் தேங்காய் எண்ணெயில் நிறைந்துள்ளன. இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது ஏராளமான நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இது குறித்த தகவல்களை மத்திய அரசு மருத்துவமனையான ESIC மருத்துவமனையின் உணவியல் நிபுணரான ரிது பூரி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
எடை இழப்புக்கு உதவும்
தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு மெதுவாக ஜீரணமாகி உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இது இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் பசி ஆர்வத்தையும் குறைக்க உதவுகிறது. எனவே இந்தப் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உங்கள் உடல் எடையை கணிசமாக குறைத்திடலாம்.
நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு நல்லது
உங்களுக்கு நீர்க்கட்டி அல்லது PCOS பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பதை வழக்கமாகி கொள்ளலாம். PCOS பிரச்சனை உள்ளவர்கள் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இந்நிலையில் சுத்தமான தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது, கொழுப்பு படிவதால் செரிமானன் தாமதம் ஆகும். இதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனையையும் சமாளிக்க முடியும்.
மூல நோய்க்கு நன்மை பயக்கும்
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் கழிப்பது கடினமாகவும், வலி நிறைந்ததாகவும் இருக்கும். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற தேங்காய் எண்ணெய் நிச்சயம் கைக்கொடுக்கும். சுத்தமான தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வர 3-4 நாட்களில் வலி குறைந்து நல்ல மாற்றங்களை உணரலாம். ஒமேகா 3 நிறைந்துள்ள தேங்காய் எண்ணெயை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் பொழுது அது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சனையை பெருமளவு சமாளிக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆரோக்கியத்திற்கு எந்த சமையல் எண்ணெய் சிறந்தது தெரியுமா?
பருவ கால நோய்களைத் தடுக்கும்
நீங்கள் பருவ கால நோய்களால் அடிக்கடி பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இதை தினசரி எடுத்துக் கொள்ளும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.
வெறும் வயிற்றில் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அறிந்திருப்பீர்கள். இதை வழக்கமாக்கி கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரை ஒரு முறை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik