கர்ப்ப காலத்தில் உண்ணும் உணவிலும் குடிக்கும் பானத்திலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் இந்த சமயத்தில் பல விஷயங்கள் உடலுக்கு சேராது. எனவே கர்ப்ப காலத்தில் எந்த விதமான உணவை உண்ண வேண்டும் மற்றும் அதை எந்த அளவு எடுக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சாதாரண வாழ்க்கையில் எடுக்கப்படும் வழக்கமான உணவுப் பொருட்கள் கர்ப்ப காலத்தில் சேராமல் போனாலோ அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தாலோ, மருத்துவர்கள் அது போன்ற உணவுகளுக்கு தடை விதிக்கிறார்கள் அல்லது குறைவாக சாப்பிட அறிவுறுத்துகிறார்கள். பல பெண்கள் கிரீன் டீ பற்றி பல விதமான கருத்துக்களை கேட்டு குழப்பமடைகிறார்கள்.
கிரீன் டீ பெரும்பாலான பெண்களுக்கு அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. கிரீன் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் காணப்படுகின்றன, மேலும் இது பல வழிகளில் உடலுக்கு நன்மை பயக்கும். IVF நிபுணர் அர்ச்சனா தவான் பஜாஜிடம் கர்ப்பிணி பெண்களுக்கு கிரீன் டீ நல்லதா என்பதை குறித்து பேசினோம், அவர் அதைப் பற்றிய முக்கியமான தகவல்களை நமக்கு அளித்தார்.
இதுவும் உதவலாம் :கர்ப்பிணிகளுக்கான போலிக் ஆசிட் நிறைந்த உணவுகள் இவை தான் தெரியுமா?
கர்ப்ப காலத்தில், பெண்கள் ஆரோக்கியம் தரும் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள், அதே போல் தொடர்ந்து தண்ணீர் குடிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறார்கள். இத்துடன் , கர்ப்பிணிப் பெண்களும் டீ, காபியைக் குறைத்து, ஒரு அளவுக்குள் மட்டும் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இவற்றில் காஃபின் எனும் வேதி பொருள் உள்ளது. இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கிரீன் டீ சாதாரண டீயை விட அதிக நன்மை தரும் ஆற்றல் கொண்டது என்று பொதுவாக சொல்லபடுகிறது, எனவே சில பெண்கள் கர்ப்ப காலத்தில் கிரீன் டீயை அதிகமாக குடிக்கிறார்கள். டாக்டர் அர்ச்சனா தவான் பஜாஜ் கூறுவதாவது கர்ப்பிணி பெண்கள் கிரீன் டீ குடிக்கும் போது ஒரு விஷயத்தை மட்டும் கவனிக்க வேண்டும். இந்த ஒரு விஷயத்தை மட்டும் கருத்தில் கொண்டு, கிரீன் டீ குடித்தால் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.
அன்றாட வாழ்க்கையில் கிரீன் டீ குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்குமோ, அதே போல் தான் கர்ப்ப காலத்தில் கிரீன் டீ குடிப்பதும் உடலுக்கு நன்மை பயக்கும். இந்த நேரத்தில் கிரீன் டீ குடிப்பதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. ஆனால் கிரீன் டீ அல்லது சாதாரண தேநீர் குடிக்கும் போது அதை அதிகம் கொதிக்க விடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். டீ பேக் மூலம் கிரீன் டீ தயாரிப்பதாக இருந்தால், அதை இரண்டு அல்லது மூன்று முறை முழுக விட்டு பிறகு உடனடியாக அகற்றவும். கர்ப்பிணிப் பெண்களுக்கு திடம் நிறைந்த டீ ஏற்றது அல்ல, ஏனெனில் இந்த செயல்பாட்டின் போது டேனிக் அமிலம் காஃபினாக மாற்றப்படுகிறது. காஃபின் ஆரோக்கியத்திற்கு நலம் பயக்காது . இது போன்ற சூழ்நிலையில், கிரீன் டீயின் சுவை வந்தவுடன் டீ பேக்கை அகற்றவும். கிரீன் டீ தண்ணீரில் கொதிக்க வைக்கப்படுவதில்லை, சிறிது நேரம் அதில் விடப்படுகிறது, இதன் காரணமாக டீயின் சுவை தண்ணீரில் கலந்து விடுகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண் கிரீன் டீயை குடிக்க விரும்பினால், ஒரு நாளைக்கு 2 முறை குடிக்கலாம். டீயில் துவர்ப்பு இருக்கக் கூடாது என்பதை மட்டும் கவனத்தில் வைத்து கொள்ளுங்கள். ஒரு பெண்ணுக்கு கிரீன் டீ குடிப்பதால் பிரச்சனையோ அல்லது அசௌகரியமோ ஏற்பட்டால்,கிரீன் டீயை குறைந்த அளவு குடிப்பது அல்லது சுத்தமாக குடிக்காமல் இருப்பது நல்லது.
இதுவும் உதவலாம் :கர்ப்பக்காலத்தில் காளான் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது
கிரீன் டீ குடிப்பது சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும் என்று பெண்கள் பலர் நினைக்கிறார்கள், அதனால்தான் கர்ப்பிணிப் பெண்கள் கிரீன் டீ குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் அப்படி எதுவும் பிரச்சனை இல்லை என்று டாக்டர் அர்ச்சனா கூறுகிறார் . கர்ப்பிணிகள் கிரீன் டீயை தாராளமாக குடிக்கலாம், அதை குடிப்பதால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.