
தினசரி பல் துலக்கினால் நம் பற்களின் மஞ்சள் நிறம் மறைந்து வாய் துர்நாற்றமும் படிப்படியாக குணமாகும் என்று மருத்துவர் நிபுணர்கள் கூறுகின்றனர். முத்து போல பளபளப்பு பற்கள் இருந்தால் நீங்கள் வெளிப்படையாக சிரிக்க முடியும். ஆனால் ஒரு சிலருக்கு மஞ்சள் கரை பற்களில் இருப்பதன் காரணமாக பிறரிடம் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். இந்த அணுகுமுறை அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. அந்த வரிசையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் சில பல் பொடியை பயன்படுத்தி வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கரை நீங்கி முத்துப்போல வெண்மையான பற்களை பெற முடியும்.

பற்களில் உள்ள பிரச்சனைகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவதற்கு கல் உப்பை பயன்படுத்தலாம். பற்களின் பிரச்சினைகளுக்கு அதிக பயனுள்ள ஒரு பொடி இந்த கல் உப்பு. கல் உப்பு பொடி தயாரிக்க ஒரு டேபிள் ஸ்பூன் குக்கிங் சோடா ஒரு டேபிள்ஸ்பூன் களிமண் தூள் அரை டேபிள்ஸ்பூன் கல் உப்பு மற்றும் அரை டேபிள்ஸ்பூன் புதினா மற்றும் லவங்கப்பட்டை தூள் எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த பொருட்களை வைத்து பற்களை வீட்டில் இருந்தபடி வெள்ளையாக்க முடியும். முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் குக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இப்போது அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இதனை ஒரு ஜாடியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். தினசரி காலையில் பல் துலக்கும் போது இந்த பொடியை சேர்த்து பற்களை தேய்த்து வந்தால் நாளடைவில் மஞ்சள் கரை நீங்கி வெண்மையாக மாற உதவும்.

இந்த ஆரஞ்சு தோலின் வெள்ளை பகுதியில் வைட்டமின் சி சத்து மற்றும் கரையக்கூடிய நார்சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இதனால் இது நம் பற்களை வெண்மையாக்கும் இயல்பை இயற்கையாகவே கொண்டுள்ளது. முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பழத்தை தோலுரித்து தோலின் வெள்ளை பகுதியை உங்கள் பற்களில் தேய்க்க வேண்டும். தினசரி பல் துலக்குவதற்கு முன்பு இந்த ஆரஞ்சு சாற்றை உங்கள் பற்களில் சுமார் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது நாளடைவில் உங்கள் பற்களில் காணப்படும் மஞ்சள் கரையை நீக்க பெரிதும் உதவுகிறது.
நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வாழைப்பழம் அளிக்கிறது. இந்த வாழைப்பழம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நன்மை அளிக்கிறதோ அதே அளவுக்கு அதன் தோளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் பற்களுக்கு நன்மை அளிக்க உதவுகிறது. மஞ்சள் கறை படிந்த பற்களை வெண்மையாக்க வாழைப்பழத் தோல் ஒரு சிறந்த மருந்து. இதற்கு முதலில் வாழைப்பழத்தின் வெள்ளைப் பகுதியை தினமும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் பற்களில் தேய்த்து பிறகு பல் துலக்க வேண்டும். இந்த வாழைப்பழத் தோளில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நம் பற்களுக்கு இயற்கை முறையில் நன்மை அளிக்கும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com