பல ஆண்டுகளாக தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது தனித்துவமான சுவை மற்றும் மனம் உடையது. அவியல், கூட்டு போன்ற உணவுகளின் சுவையை கூட்டுவது தேங்காய் எண்ணெய் தான். இது சுவையானது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் அதிக நன்மை பயக்கிறது. தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதால் கிடைக்கும் 6 நன்மைகளை இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
1.தலைமுடியை பாதுகாக்கிறது
தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் எனும் கொழுப்பு அமிலவகை நிறைந்துள்ளது. இது தலை முடிக்கு ஊட்டமளிக்கிறது.
தேங்காய் எண்ணெய் தலைமுடியின் புரத இழப்பை குறைத்து, அதன் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
2. தொப்பையை குறைக்க உதவுகிறது
தேங்காய் எண்ணெய் பசி உணர்வை குறைத்து எடை இழப்புக்கு உதவுகிறது. இது குறைந்த கலோரி உட்கொள்வதையும், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதையும் உறுதி செய்கிறது. மேலும் தேங்காய் எண்ணெய் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் எனும் குறிப்பிட்ட கொழுப்புகளையும் கொண்டுள்ளது, இவை தொப்பை கொழுப்பைக் குறைப்பதில் பங்களிக்கின்றன.
3. சருமத்தை அழகாக்குகிறது
வறண்ட சருமம் உடையவர்கள் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் சாருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாக்கலாம். தேங்காய் எண்ணெய் சருமத்தின் ஈரத்தன்மையை மேம்படுத்துவதாக பல ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உங்கள் சருமம், நகம் மற்றும் தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்தை வழங்கி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
4. அல்சைமர் நோயின் (நினைவாற்றலிழப்பு நோய்) அறிகுறிகளை குறைக்கிறது
அல்சைமர் நோயின் சிகிச்சைக்காக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம் என்று சில கூற்றுக்கள் உள்ளன. இருப்பினும் இதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதற்கு மாறாக alzheimers.org.uk இன் படி , "தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
5. செரிமானத்திற்கு உதவுகிறது
தேங்காய் எண்ணெய், கரையக்கூடிய கொழுப்பு கூறுகளான வைட்டமின், மெக்னீசியம் ஆகியவற்றை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது. இதன் மூலம் உணவு செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும், வயிற்றில் அழற்சி மற்றும் மோசமான செரிமானத்தை உண்டாக்கும் கேண்டிடா மற்றும் நச்சு பாக்டீரியாக்களை அகற்றவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பிற்கு உதவும் லெமன் டீயின் 5 அதிசய நன்மைகள்
6. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எலும்பு செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பல ஆராய்ச்சிகள் தேங்காய் எண்ணெயை ஆரோக்கியமானது என்று கூறினாலும், அது தூய கொழுப்பு என்பதால் தேங்காய் எண்ணெயை எப்போதும் அளவோடு மிதமாக எடுத்துகொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com