பட்டுப் புடவையை விரும்பாத பெண்கள் உண்டா? பெண்களின் ஆசைக்கான பட்டியலில் முதலிடம் புடவைகளுக்கு தான். அதிலும், பட்டுப் புடவை என்றால் எப்போதும் ஸ்பெஷல்தான். குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லா முக்கிய நிகழ்வுகளுக்கும் பெண்கள் பட்டுப் புடவை அணிந்து செல்வது கலாச்சாரமாகவே மாறி விட்டது. திருமணம் தொடங்கி பண்டிகை நாட்கள், விசேஷங்கள், கோயில்களுக்கு பட்டுப் புடவையை அணிந்து செல்ல பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்.
ஆசைப்பட்டு பட்டுப் புடவையை வாங்கும் பெண்களுக்கு அதைப் பராமரிப்பதுதான் பெரிய வேலை. அதே போல் அதிக விலை கொடுத்து வாங்கும் பட்டுப் புடவை காலத்திற்கும் உழைக்க வேண்டும். அதற்கு சில விஷயங்களைக் கவனித்து பார்த்து, பட்டுப் புடவையை வாங்க வேண்டும். அவை என்னென்ன விஷயங்கள்? என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
துணியில் கவனம் செலுத்துங்கள்
பட்டுப் புடவை வாங்கும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் முதலில் புடவையின் துணியை பார்த்து வாங்குங்கள். பட்டுப் புடவை எப்போதுமே பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், அணிந்து கொள்வதற்கு வசதியாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு பட்டுப் புடவை வாங்க திட்டமிட்டால், அதன் துணி மீது சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
சரியான கலரைத் தேர்ந்தெடுங்கள்
சில நேரங்களில் நாம் மிகவும் வித்தியாசமான கலர்களைத் தேர்வு செய்வோம். நீங்கள் பட்டுப் புடவை வாங்கத் திட்டமிட்டால், சரியான கலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். டார்க் கலருக்கு பதிலாக லைட் கலர் புடவையை வாங்குங்கள். எப்போதுமே லைட் கலர் பட்டுப் புடவைகள் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த கருநீல ஆடைகள் உங்களை மிக ஸ்டைலாக மாற்றிவிடும்
நல்ல கடைகளில் வாங்குங்கள்
நல்ல நம்பகமான கடைகளில் தான் புடவை வாங்க வேண்டும். சில சமயங்களில் போலியான பட்டுப் புடவைகளை வாங்கி ஏமாறவும் வாய்ப்புண்டு. எனவே, கடைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாய் இருங்கள். புடவை வாங்கும் போது துணி முதல் பல விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக பட்டுப் புடவை வாங்கும் போது தனியாக செல்லாதீர்கள்.
பட்டுப் புடவைகள் அதிக விலையுடையவை. சில கடைகளில் ஒரிஜினல் பட்டுப் புடவை என்ற பெயரில் சாதாரணப் பட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றன. இந்த விஷயத்தில் பார்த்து கவனமாய் இருங்கள். பட்டுப் புடவையைச் சரியாக அடையாளம் கண்டு வாங்க தெரிந்தால் மட்டுமே தனியாக செல்லுங்கள். இல்லையெனில், புடவையில் நன்கு அனுபம் உள்ளவர்களை உடன் அழைத்துச் செல்லுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: எந்த ட்ரெஸ் போட்டாலும் ஒல்லியா தெரியணுமா?
எனவே, இனிவரும் நாட்களில் பட்டுப் புடவை வாங்கும் போது இந்த விஷயங்களை மனதில் கொண்டு புடவையை தேர்ந்தெடுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik