
திரையில் நாம் கண்டு ரசிக்கும் நடிகர், நடிகைகள் விரும்பி உண்ணும் உணவு என்ன? என்பதை தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவில் கோலிவுட் ஸ்டார்களின் உணவு பழக்கம் மற்றும் அவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு பட்டியலை குறித்து பார்க்க போகிறோம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில வருடங்களுக்கு முன்பு சுத்த சைவமாக மாறிவிட்டார். அவர் அசைவம் சாப்பிட்ட காலத்தில் அவருக்கு மிகவும் பிடித்த உணவு ஆப்பம், ஆட்டுக்கால் பாயா, மட்டன், சிக்கன் கிரேவி போன்றவை.
இந்த பதிவும் உதவலாம்:நீதா அம்பானி குடிக்கும் டீயின் விலை இத்தனை லட்சமா!
கமல்ஹாசனுக்கு சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி என்றால் உயிர். அதே போல் சாப்பாட்டில் மட்டன் கறி மற்றும் சிக்கன் கறி என்றால் மிகவும் பிடிக்குமாம்.
நடிகர் தனுஷ் சைவம் சாப்பிடக்கூடியவர். அவருக்கு தென்னிந்திய உணவுகள் என்றல் மிகவும் பிடிக்கும். பேப்பர் தோசை, சாம்பார், வத்தக்குழம்பு ஆகியவை தனுஷின் ஃபேவரெட்.

நடிகர் சூர்யாவுக்கு தயிர் சாதம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதே போல் அவர் தோசை விரும்பியும் கூட.
கார்த்திக்கு நம்ம ஊர் உணவான இட்லி, சாம்பார், வடை, சட்னி ஆகியவை ஆல் டைம் ஃபேவரெட்.
நடிகர் விஜய்யுக்கு மிகவும் பிடித்தமான உணவு தோசை மற்றும் மட்டன் கறி. அம்மா ஷோபா செய்யும் மட்டன் பிரியாணியும் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.
நடிகர் அஜித் பல வகையான உணவுகளை ருசி பார்க்க கூடியவை. அதிகளவும் பயணம் மேற்கொள்வதால் தான் செல்லும் ஊரில் இருக்கும் உணவுகளை மிஸ் செய்யாமல் ட்ரை செய்து பார்க்கும் பழக்கம் கொண்டவர்.
ஸ்ருதிஹாசன் டயட்டில் அதிக கவனம் எடுத்து கூடியவர். ஆனால் தென்னிந்திய சாம்பார் வகைகளை பார்த்ததும் ஒரு பிடி பிடிப்பாராம்.
மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால், சென்னை வந்தால் கட்டாயம் சாப்பிடக்கூடிய டிஷ் இட்லி, தோசை, சாம்பார், பொங்கல், பூரி, பிரியாணி. தென்னிந்திய சமையல் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரேயாவுக்கு சப்பாதி மற்றும் சிக்கன் கறி என்றால் மிகவும் பிடிக்குமாம்.
பன்முக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி. சிக்கன், மட்டன் இரண்டையும் விரும்பி சாப்பிடுவாராம்.
திருமணத்திற்கு பிறகு இருவரும் அடிக்கடி விரும்பி செல்லும் ஹோட்டல் ஈரோடு அம்மன் மெஸ். இங்கு இருக்கும் ஜப்பான் சிக்கன் இருவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.
இந்த பதிவும் உதவலாம்:தளபதி விஜய் ஜிம்முக்கு செல்வாரா? அவரின் டயட் சீக்ரெட் என்ன தெரியுமா?
சென்னை பெண்ணான சமந்தாவுக்கு நம்மூர் இட்லி சாம்பார் மிகவும் பிடிக்குமாம். அதற்கு பின்பு ஹதராபாத் பிரியாணியையும் விடும்பி சாப்பிடுவாராம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com