
பளபளப்பான சருமத்தை பெற பார்லர் செல்வதை இனி குறைத்து கொள்ளுங்கள். அருமையான இந்த ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே ட்ரை செய்து பாருங்கள். சருமத்திற்கு நீங்கள் இயற்கையான விஷயங்களை செய்ய விரும்பினால் கட்டாயம் இதை ட்ரை செய்து பாருங்கள். வீட்டில் தயாரிக்கப்பட்ட நைட் ஃபேஸ் மாஸ்க்கைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம், இதை இரவில் தடவுவதன் மூலம் பளபளப்பான மற்றும் களங்கமற்ற சருமத்தைப் பெறலாம். இதை , தூங்குவதற்கு முன் பயன்படுத்துவதன் மூலம், சருமம் பளபளப்பையும் பெறும்.
தேங்காய் எண்ணெய் உங்கள் முடி மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்க சிறந்த வழி. குறிப்பாக இரவில் சசருமத்திற்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படுகிறது. தூங்ஜ்குவதற்கு முன் தேங்காய் எண்ணெய் முகத்தில் தடவி மசாஜ் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

கற்றாழை உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது, அனைத்து தோல் பிரச்சனைகளையும் நீக்க இதைப் பயன்படுத்துகிறேன். கற்றாழையில் அமினோ அமிலங்கள் மற்றும் ஏ, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் சாலிசிலிக் அமிலம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது முன்கூட்டிய சுருக்கங்களைத் தடுக்கிறது. இரவு தூங்கும் முன் சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து சருமத்தில் தடவலாம் அல்லது 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலுடன் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து முகம் மற்றும் கழுத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்யலாம்.
மஞ்சள் சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது ம. இதை முகத்தில் தடவினால் வித்தியாசமான பொலிவு கிடைக்கும். மஞ்சளைப் பயன்படுத்த, ¼ டீஸ்பூன் மஞ்சளில் 1 டேபிள் ஸ்பூன் பாலைக் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். பின் அதனை நன்றாக கலந்து முகத்தில் தடவவும். தூங்குவதற்கு முன் இதை செய்தால் மிகவும் நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com