watermelon juice : தர்பூசணி ஜூஸ் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள்

பெண்களின் முக அழகு மற்றும் சருமத்திற்கு தர்பூசணி ஜூஸ் பல நன்மைகளை வழங்குகிறது. இந்த பதிவில் தர்பூசணி ஜூஸ் நன்மைகள் குறித்து பார்ப்போம். 

Sreeja Kumar
watermelon benefits

பெண்கள் எப்பொதுமே சருமம் மற்றும் முக அழகில் தனி கவனம் செலுத்துகின்றனர். சரும பராமரிப்பு என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிக மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. சுற்றுசூழல் மாசு, உணவு முறை, நீண்ட தூர பயணம், மேக்கப் பொருட்கள் போன்ற பல்வேறு காரணங்களால் முகத்தில் பல்வேறு சரும பாதிப்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முகப்பரு தொடங்கி அலர்ஜி, எரிச்சல், தோல் தொடர்புடைய நோய் வரை இவை பெரிதாக மாறக்கூடியவை.

எனவே, அன்றாட வாழ்க்கையில் சரும பாராமரிப்பு முறையை பழகமாக்கி கொள்ள வேண்டும். வெளியில் சென்று வந்தபின்பு கட்டாயம் முகத்தை சுத்தமான நீரால் கழுவ வேண்டும், அதே போல், வெயிலில் செல்லும் போது சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இரவு நேரத்தில் ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ்க் ஷீட் போன்ற அழகு பராமரிப்பு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இவற்றை முறையாக கடைப்பிடித்தால் சருமம் எப்போதுமே இளமையுடன் இருக்கும்.

சரும பராமரிப்பு விஷயத்தில் உணவுமுறையும் மிக மிக அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பழங்களை அதிகம் எடுத்து கொள்ளவும். பெண்களின் சருமத்திற்கு ஈடு இணையற்ற நன்மையை தரக்கூடியது தர்பூசணி. இதை பழமாகவும் சாப்பிடலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்:காபி தூளை கையில் எடுங்கள் முகப் பிரச்சனைகளை விரட்டுங்கள்

எனவே, இந்த பதிவில் சருமத்திற்கு தர்பூசணி ஜூஸ் தரும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தர்பூசணி ஜூஸ்

இதில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் முகத்திற்கு பளபளப்பான தோற்றத்தை தருகிறது. சருமத்தை ஈரப்பத்துடனும் வைத்து கொள்ள உதவுகிறது. தர்பூசணி பழ ஜூஸை மதிய வேளையில் எடுத்து கொள்வது மிக மிக நல்லது. கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழ ஜூஸை குடித்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

watermelon tips tamil

தயாரிக்கும் முறை

  • தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதில் இருக்கும் விதையை நீக்கி விடவும்.
  • பின்பு இதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • இதில் சர்க்கரை அல்லது தண்ணீர் சேர்க்க கூடாது. விருப்பமிருந்தால் சிறிதளவு தேன் சேர்க்கவும்.
  • பின்பு இதை வடிக்கட்டி மதிய நேரத்தில் 1 டம்ளர் குடிக்கவும்.
  • முகத்தில் பல மாற்றங்கள் நிகழ்வதை உணரலாம்.

குறிப்பு: தர்பூசணி பழம் அல்லது ஜூஸ் சாப்பிடால் உடலில் அலர்ஜி ஏற்படும் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் அறிவுரை பெற்ற பின்பு இதை பின்பற்றவும்.

Images Credit: freepik

Disclaimer