நீளமான அடர்த்தியான கூந்தல் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் இன்றைய வாழ்க்கை முறை இதற்கான சாத்தியத்தை குறைத்துவிட்டது. கூந்தலின் அடர்த்தி குறைய தொடங்கினால், மெலிந்த கூந்தலில் விதவிதமான ஹேர் ஸ்டைல் செய்ய முடியாமல் போகலாம். முடியின் அடர்த்தியை மேம்படுத்துவதாக கோரும் பலவித தயாரிப்புகளும் இதற்கு எப்போதும் தீர்வு தருவதில்லை. அப்படியே முடி உதிர்வு குறைந்தாலும் அவை நிரந்தரமாக இருப்பதில்லை.
முடியின் அடர்த்தியை அதிகரிக்க ரசாயனங்கள் நிறைந்த தயாரிப்புகளுக்கு பதிலாக வீட்டு குறிப்புகளை முயற்சி செய்வதே சிறந்தது. இன்றைய பதிவில் முடியை அடர்த்தியாக்குவதற்கான வீட்டு குறிப்புகளையும், தலைமுடி பராமரிப்பு குறித்த சில முக்கியமான தகவல்களையும் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நீளமான அடர்த்தியான கூந்தல் தரும் தேங்காய் தண்ணீர்
செம்பருத்தி பூ
இது தலைமுடி மற்றும் முகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நீளமான அடர்த்தியான கூந்தலை பெற விரும்பினால், நிச்சயம் செம்பருத்திப் பூக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முடி உதிர்வை தடுக்க இந்தப் பூக்களை கொண்டு ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- செம்பருத்தி பூக்கள்
- தேங்காய் எண்ணெய்
செய்முறை
- முதலில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி பூவை எடுத்து அதை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- சுத்தம் செய்த பூக்களை ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
- இதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக அரைக்கவும்.
- தலைமுடிக்கான ஹேர் மாஸ் தயார்.
பயன்படுத்தும் முறை
- செம்பருத்தி மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஹேர் மாஸ்கை உங்கள் தலைமுடிக்கு தடவவும்.
- அரை மணி நேரம் கழித்து, மென்மையான ஷாம்புவை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசலாம்.
- இந்த ஹேர் மாஸ்கை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கான முடி பராமரிப்பு வழிமுறைகள்
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
- தலைமுடிக்கு கலரிங், கேரட்டின் போன்ற சிகிச்சைகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவை உங்கள் கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.
- தலைக்கு குளித்த உடனே சீப்பு பயன்படுத்த வேண்டாம். இதுவும் முடி உதிர்வை ஏற்படுத்தும்.
- முடியை இறுக்கமாக கட்டுவதை தவிர்க்கவும். தலையை அவ்வப்போது சீவுவது தவறல்ல. இருப்பினும் தலை முடியை அடிக்கடி அழுத்தம் கொடுத்து சீவுவதை தவிர்க்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik