நமக்குப் பிடித்த சௌகரியமான உடை அணிவதே ஃபேஷன். நீங்கள் உடுத்தும் உடை, அணிகலன்கள் தொடங்கி நெற்றியில் வைக்கும் பொட்டு வரை உங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்யுங்கள். அடுத்தவரின் கண்ணோட்டதிற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் மாளவிகா அவினாஷ்.
மாளவிகா அவினாஷ் ஒரு இந்திய நடிகை, வழக்கறிஞர், ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துப் பிரபலம் ஆனவர். அதிக வசூல் செய்த கன்னட திரைப்படமான KGF இல் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்.இவர் நடித்த படங்களில் இவருடைய உடையும், ஒப்பனையும் தனித்து நிற்கும். நேர்த்தியான உடை அணிந்து, எளிமையாக இருக்கும் மாளவிகாவின் சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு முறையைத் தெரிந்து கொள்வோம்.
ஃபேஷியல் செய்யாமல் சருமத்தை பராமரிப்பது எப்படி?
- சமீப காலமாக ஃபேஷியல் செய்வதை நிறுத்திவிட்டாராம் மாளவிகா.இவரின் சரும பராமரிப்பு முறையைத் தெரிந்துகொள்வோம்:-
- முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டால் பருக்கள், கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
- முகத்திற்கு நீராவி பிடித்து, கரும்புள்ளிகளை அகற்றலாம்.இதை முறையாகச் செய்யத் தெரியாதவர்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று முகத்தைச் சுத்தம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு செய்வதால் பருக்கள் வராது.
- முகத்தை அடிக்கடி கழுவவும். இவ்வாறு செய்வதால் சரும வறட்சி ஏற்படலாம். ஆகையால் முகத்தைக் கழுவிய பிறகு கட்டாயமாக மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்.
- உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம்.
பட்டுப் போல மென்மையான கூந்தல் பெற செய்ய வேண்டியவை
- மருதாணி பொடி அல்லது இலைகளுடன் காபி/டீ டிகாஷன் சேர்த்து தலைமுடிக்கு பேக் போடலாம். இது உங்கள் கூந்தலை மென்மையாக்கும்.
- தலைமுடியை அலசுவதற்கு ஒரு போதும் உப்பு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம்.
- முடிந்த வரை சுத்தமான நீரில் கூந்தலை அலசவும்.
- நரை முடிக்கு வண்ணம் தீட்ட இரசாயனங்கள் நிறைந்த சாயங்களுக்குப் பதிலாக ஆயுர்வேத முறையைப் பின்பற்றுங்கள்.
புடவை அணியும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும்?
ஒரே புடவையில் அதிக முதலீடு செய்யாமல், அதே தொகைக்கு நிறைய புடவை வாங்கிவிடுவாராம் மாளவிகா.இதுவரை 25000 க்கும் மேற்பட்ட புடைவைகளை உடுத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். புடவை மற்றும் பிளவுஸ் குறித்து அவர் பகிர்ந்துள்ள விஷயங்களைப் பார்ப்போம்
- புடவை அணியும்பொழுது ஒல்லியாகத் தெரிவதற்கு பிஷ் கட் ஷேப்வியர் அல்லது உள்பாவாடைகள் அணிய வேண்டும்.
- குண்டாக இருப்பவர்கள், நீளமான கை அமைப்பு கொண்ட பிளவுஸ் டிசைன்களை தவிர்க்க வேண்டும்.
- பிளவுஸின் கைப்பகுதியில் பார்டர் வைத்துத் தைத்தால், இது உங்களை மேலும் குண்டாகக் காட்டலாம். இதைத் தவிர்த்துப் புடவையின் நிறத்திற்கு ஏற்றவாறு பிளவுஸின் கைப்பகுதியை வடிவமைக்கலாம்.
- புடவையின் பார்டரை பிளவுஸின் பின்புறத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சற்று உடல் பருமனாக இருப்பவர்கள் ஹை-நெக் ப்ளவுஸ் அணிவதை தவிர்த்திடுங்கள்.
இவரின் குறிப்புகள், நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். மாளவிகாவை போல, நீங்களும் இயற்கையான முறையில் உங்கள் அழகை பராமரிக்க விரும்பினால் இந்தக் குறிப்புகளைப் பின்பற்றிப் பயனடையலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google