இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் மகிழ்ச்சிகரமாக, ஆடம்பரமாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஹோலியும் ஒன்றாகும். வண்ணங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் ஹோலியில் சிரிப்பும், வேடிக்கையும், மகிழ்ச்சியும் இரட்டிப்பாக இருக்கும். வண்ண பொடிகளையும், நீரையும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது பூசும் விளையாட்டு எல்லோரையும் சிறு பிள்ளைகளாக மாற்றிவிடும். ஆனால் இந்த வண்ணங்களால் சருமத்திற்கு பாதிப்புகள் ஏற்படலாம். ஹோலி வண்ணங்கள் உங்கள் சருமத்தை பாதிக்கும் என்ற அச்சம் உங்களுக்கும் இருக்கிறதா?
ஹோலி பண்டிகையின் போது ஏற்படும் சரும பாதிப்புகளை தடுப்பதற்கான சில வழிமுறைகளை இப்பதிகள் பார்க்கப் போகிறோம். இந்தக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் ஹோலி வண்ணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை தடுக்கலாம். இதைப் பின்பற்றினால் சரும பாதிப்பு பற்றிய கவலையின்றி நீங்களும் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகையை கொண்டாடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆன்லைனில் வெறும் ரூ. 500க்கு கிடைக்கும் சிறந்த பவுண்டேஷன்கள்
தேங்காய் எண்ணெய் தடவவும்
ஹோலி பண்டிகையை கொண்டாட வெளியே செல்வதற்கு முன் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெயை தாராளமாக தடவவும். இது உங்கள் சருமத்தில் ஒரு பாதுகாப்புத் தடையை உருவாக்குகிறது. இதன் மூலம் வண்ணங்கள் உங்கள் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவுவதைத் தடுக்கலாம். மேலும் வெயில் அதிகம் உள்ள நாட்களில், சூரியனின் தீங்கு விளைவிக்கும் UV கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாத்து கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஹோலி ஆடைகள்
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்த்து, கொஞ்சம் தளர்வான முழு கை ஆடைகளை அணிவது நல்லது. ரசாயணங்கள் நிறைந்த வண்ணங்கள் சருமத்திற்கும், கண்களுக்கும் தீங்கு விளைவிக்கலாம். ஆகையால் முழு கை ஆடைகளை அணிவதோடு சன் கிளாஸையும் அணியலாம். இதன் மூலம் கண்களுக்கு ஏற்படும் அலர்ஜி, எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தண்ணீர் குடியுங்கள்
தேவைப்படும் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை நம்மில் பலரும் மறந்துவிடுகிறோம். ஹோலி கொண்டாட்டங்களின் போது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் சருமத்த்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதுடன் மட்டுமின்றி, வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படாமல் தடுக்கவும் உதவவியாக இருக்கும்.
செயற்கை வண்ணங்களைத் தவிர்க்கவும்
செயற்கை நிறங்களில் தீங்கு விளைவிக்கும் பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கின்றன. ஆகையால் சுற்று சூழலுக்கு உகந்த பூக்கள், காய்கறிகள் அல்லது பழங்களால் ஆன இயற்கை வண்ணங்களைப் பயன்படுத்துவது நல்லது.
குளிர்ந்த நீரில் குளிக்கவும்
ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு வண்ணங்களை அகற்ற உடனடியாக குளிப்பது நல்லது. குளிப்பதற்கு சூடான நீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனால் வண்ணங்கள் சருமத்தில் ஆழமாக ஊடுருவலாம். எனவே சரும பிரச்சனைகளை தவிர்த்திட குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள். குளிர்ந்த நீர் சரும எரிச்சல் மற்றும் வண்ணங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். குளிப்பதற்கு மென்மையான சோப்பு அல்லது பாடி வாஷ் பயன்படுத்தலாம்.
மாய்ஸ்சரைசர் / கற்றாழை
சரும வறட்சியை தடுக்க குளித்த பிறகு மாய்ஸ்சரைசர் அல்லது கற்றாழை ஜெல் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம். இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும், அரிப்பு மற்றும் வளர்ச்சியை தடுக்கவும் உதவும்.
பண்டிகைக்குப் பிறகு சருமத்தில் ஏதேனும் அலர்ஜி, அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால், அறிகுறிகளை புறக்கணிக்காமல் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தர்பூசணி ஜூஸ் சருமத்திற்கு வழங்கும் நன்மைகள்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik